வேதாளம் படம் திரைக்கு வந்து கிட்டத்தட்ட 30 நாட்கள் தாண்டிவிட்டது. இதுவரை வந்த அஜித் படங்களில் இதற்கு தான் மிகப்பெரிய ஓப்பனிங் என்று கூறப்படுகின்றது.
மேலும், அஜித்திற்கு கர்நாடகாவில் அதிக ரசிகர்கள் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் வேதாளம், அங்கு மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.கர்நாடகாவில் இவ்வருடம் வந்த ஐ தான் ரூ 14.67 கோடி வசூல் செய்து முதலிடத்தில் உள்ளது.
எந்திரன் 14.30 கோடி ரூபாய், லிங்கா ரூ 11.78 கோடி வசூல் செய்து 2 மற்றும் 3வது இடங்களில் உள்ளது.வேதாளாம் ரூ 11.62 கோடி வசூல் செய்து 4வது இடத்தில் இருக்க, இன்னும் சில தினங்கள் ஓடினால் லிங்கா சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.
Tags:
Cinema
,
அஜித்
,
கர்நாடகாவில் வேதாளத்திற்கு கிடைத்த கௌரவம்
,
சினிமா
,
வேதாளம்