தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நிதி திரட்டி வருகிறது.தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தென்னிந்திய நடிகர்கள் சங்கம் நிதி திரட்டி வருகிறது.
சூர்யா, கார்த்தி சார்பாக 25 லட்ச ரூபாயும், விஷால் 10 லட்சமும், தனுஷ் 5 லட்சமும் நிவாரண நிதி அளித்துள்ளனர். விக்ரம் பிரபு மற்றும் பிரபு சார்பாக ரூபாய் ஐந்து லட்சம் நடிகர் சங்கத் தலைவர் நாசரிடம் வழங்கப்பட்டது.
அதேபோல் சிவ கார்த்திகேயன் 5 லட்சம் அளித்துள்ளார்.சத்யராஜ், சிபி ராஜ் சார்பில் ரூபாய் இரண்டு லட்சத்து இருபத்தைந்தாயிரமும் நிதி அளிக்கப்பட்டது. இதுவரை மொத்தம் 52 லட்சத்து 25 ஆயிரம் நிதி நடிகர் சங்கத்தால் திரட்டப்பட்டுள்ளது.ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களிடமும் நிதி கேட்கவிருப்பதாக நடிகர் சங்கத்தினர் கூறினர்.
Tags:
Cinema
,
சிவ கார்த்தியேன்
,
சினிமா
,
சூர்யா
,
விக்ரம் பிரபு வெள்ள நிவாரண நிதி