நடிகர் சிம்பு இணையதளத்தில் வெளியிட்ட ஆபாச பாடல் தமிழ் மக்களின் மனதை மிகவும் பாதித்துள்ளது. தங்கள் குழந்தைகள் அந்த பாடலை கேட்டுவிடக்கூடாதே என்று பதறிக் கொண்டிருக்கிறார்கள். பல ஊர்களில் வழக்குகள் தொடரப்படுகிறது. சென்னை போலீசாரும் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிம்பு முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு தற்போது மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் சிம்புவை கைது செய்ய 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக பெயர் குறிப்பிட விரும்பாத போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆரம்பத்தில் இதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் சிம்புவும், அவரது தந்தை டி.ராஜேந்தரும் அடுத்தடுத்து கொடுத்த பேட்டிகள், விடுத்த அறிக்கைகள், டுவிட்டரில் எழுதியவை எல்லாமே அவர்களது ஒப்புதல் வாக்குமூலமாக அமைந்தது. அவர்களே நினைத்தாலும் இனி அதை மறுக்க முடியாது.
போலீசில் கொடுத்த வாக்குமூலமாக இருந்தால் போலீசார் மிரட்டினார்கள் அதனால் அப்படிச் சொன்னேன் என்று மறுக்கலாம். இது அவர்களாகவே கொடுத்த வாக்குமூலம். ஒருவரது எந்த செயல்மூலமாக பொதுமக்களுக்கு இடையூறு ஏற்பட்டாலும் அவரை கைது செய்யலாம். இதுவும் பொதுமக்களுக்கு மனதளவில் ஏற்பட்ட இடையூறுதான் அதனால் அவரை கைது செய்வதில் எந்த சட்ட சிக்கலும் இல்லை. எனவேதான் சிம்பு, அனிருத்தை கைது செய்ய 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
அதில் ஒரு பரிவினர் முறைப்படி கைது செய்ய அவரது வீட்டுக்குச் சென்றபோது அவர் அங்கு இல்லை என்ற தகவல் கிடைத்துள்ளது. இன்னொரு பிரிவினர் கேரளாவுக்கும், மூன்றாவது பிரிவினர் ஐதராபாத்துக்கும் செல்கிறார்கள். அவர் பாஸ்போர்ட்டை முடக்கவில்லை. அவர் வெளிநாட்டுக்கும் தப்பிச் செல்லவில்லை.
முன்ஜாமீன் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் நண்பர்கள் வீடுகளில் தலைமறைவாக இருப்பதாக கருதுகிறோம். அவருக்கு அடைக்கலம் கொடுப்பதும் சட்டப்படியான குற்றம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். வழக்கை சட்டப்படி சந்திப்பேன் என்று கூறிவரும் சிம்பு பிறகு ஏன் இப்படி ஓடி ஒழிய வேண்டும் என்பதுதான் எங்களுக்கு புரியவில்லை. என்கிறார் அந்த அதிகாரி.
Tags:
Cinema
,
சட்டப்படி சந்திப்பதாக சொன்ன சிம்பு தலைமறைவு
,
சிம்பு
,
சினிமா