சோனி மியூசிக் நிறுவனம் ஆண்டுதோறும் ஆப்பிள் ஐ டியூனில் அதிகம் விற்பனையான பாடல்களின் பட்டியலை வெளியிடும். அந்த வகையில் 2015ம் ஆண்டு ஆப்பிள் ஐ டியூனில் அதிகம் விற்பனையான பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்த ஓகே கண்மணியின் பாடல்கள் தான்.
அதிலும் அதிகமுறை கேட்கப்பட்ட பாடல் "மனமன மெண்டல் மனதில்...".மணிரத்னம் இயக்கிய ஓகே கண்மணியில் மொத்தம் 7 பாடல்கள் அதில் 6 பாடல்களை வைரமுத்து எழுதியிருந்தார். மன மன மெண்டல் மனதில் பாடலை மட்டும் மணிரத்தினமும், ஏ.ஆர்.ரகுமானும் இணைந்து எழுதியிருந்தார்கள்.
"காரா... ஆட்டகாரா..." பாடலை சஷான் திருபதியும், ஆர்யான் தினேசும் பாடி இருந்தனர். "சினாமிகா..." பாடலை கார்த்திக்கும், "பறந்து செல்ல வா..." பாடலை சஷாஹாவும், கார்த்திக்கும் இணைந்தும் பாடியிருந்தார்கள். "மன மன மெண்டல்..." மனதில் பாடலை ஏ.ஆர்.ரகுமானும் ஜோனிதா காந்தியும் பாடியிருந்தார்கள்.
"நானே வருகிறேன்..." பாடலை சஷாஹா திருபதியும், சத்யபிரகாசும் இணைந்து பாடியிருந்தார்கள்."தீரா உலா..." பாடலை ஏ.ஆர்.ரகுமான் தர்ஷனா மற்றும் நிகிதா காந்தியுடன் இணைந்து பாடியிருந்தார். "மலர்கள் கேட்டேன்..." பாடலை ரகுமான் சித்ராவுடன் இணைந்து பாடியிருந்தார்.
ஏ.ஆர்.ரகுமான் மகன் அமீன் வேறொரு ஆல்பத்துக்காக பாடிய இஸ்லாமிய பிரார்த்தனை பாடலான "மவுலன வா சலிம்..." பாடலும் படத்தில் இணைக்கப்பட்டிருந்தது. 2015ம் ஆண்டு வெளியான பாடல் ஆல்பத்தில் ஓகே கண்மணி ஆல்பமே எல்லா பிரிவிலும் முதல் இடத்தை பிடித்துள்ளது.
Tags:
Cinema
,
ஆப்பிள் ஐ டியூனில் அதிகம் விற்பனையான ஓகே கண்மணி பாடல்
,
சினிமா