சிம்புவின் ஆபாச பாடல் சர்ச்சை குறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் கருத்து எதுவும் கூறாமல் இருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் சங்கத் தலைவர் நாசர், "சிம்பு செய்தது கண்டனத்துக்குரியது, கண்டிக்கத்தக்கது" என்று நடிகர் சங்கம் சார்பில் கருத்து தெரிவித்திருந்தார்.
வருகிற 26ந் தேதி கூடும் நடிகர் சங்க செயற்குழுவில் சிம்பு பிரச்சினை பற்றி உறுதியான நிலைப்பாடு எடுக்கப்படுகிறது. அதற்கு முன்பு நடிகர் சங்க நிர்வாகிகள் சிலர் சிம்புவோடும், அவரது தந்தை டி.ராஜேந்தரோடும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.
சிம்புவை "தெரியாமல் செய்து விட்டேன். என்னை தமிழ்நாட்டு மக்கள் மன்னிக்க வேண்டும்" என்ற பொருள்படும்படி ஒரு கடிதம் கொடுத்தால் அதை நாங்கள் மீடியாக்களுக்கு கொடுத்து சிம்பு சார்பில் மீடியாவிடம் பேசுவோம். பிரச்னைகளை சட்ட ரீதியாக தீர்த்து வைக்கவும் நடவடிக்கை எடுப்போம். வழக்கு தொடர்ந்தவர்களுடன் தொடர்பு கொண்டு வாபஸ் பெற வைக்கிறோம். தேர்தலில் அவர் எங்களை கடுமையாக திட்டினாலும் சக கலைஞனை நாங்கள் விட்டுக் கொடுக்க முடியாது.
அதனால் மன்னிப்பு கடிதம் மட்டும் தரச் சொல்லுங்கள் என்கிற ரீதியில் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.ஆனால் சிம்பு தொடர்ந்து "நான் என்ன தவறு செய்தேன். அந்த பாட்டு என் பர்சனல் எவனோ திருடி வெளியிட்டதற்கு நான் என்ன செய்ய முடியும். பிரச்சினையை சட்டப்படி சந்திப்பேன்" என்பதையே திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்.
Tags:
Cinema
,
சிம்பு
,
சிம்புவை காப்பாற்ற நடிகர் சங்கம் முடிவு
,
சினிமா