சென்னையில் ஏற்பட்ட பெரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தையும் தாண்டி, சிம்பு-அனிருத் இணைந்து உருவாக்கிய பீப் பாடல்தான் தற்போது கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
சிம்பு எழுதி பாடியுள்ள இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
அந்த பாடலில் சிம்பு பாடும் சில வரிகள் பீப் என்ற சவுண்டுடன் வருகிறது. அந்த வரிகள் ஆபாசமானவை என்று எல்லாராலும் கணிக்க முடியும் என்ற வகையில் அமைந்துள்ளது. ஆபாச வரிகளுடன் வெளிவந்துள்ள இந்த பாடலுக்கு பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த பாடல் குறித்து சிம்பு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, இந்த பீப் பாடலை நான்தான் பாடினேன். அனிருத்தும், நானும் சேர்ந்துதான் இந்த பாடலை உருவாக்கினோம். இந்த பாடல் எந்த படத்திலும் இடம்பெறவில்லை.
இதை என் மொபைல் போனில் வைத்திருந்தேன். யாரோ ஒருவர் அதை திருடி, இணையதளங்களில் வெளியிட்டுவிட்டார்.
இதற்கு நான் பொறுப்பு கிடையாது. நான் எந்த பாடலை பாடுவது என்பது எனது தனிப்பட்ட சுதந்திரம். இதில் யாரும் தலையிட முடியாது என்று கூறியுள்ளார்.
மேலும், இந்த பாடலுக்கு இசையமைத்த அனிருத்திடம் இதுகுறித்து விசாரிக்க முயலுகையில், அவர் வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
அனிருத்
,
எந்தவொரு பாடலையும் பாடுவது எனது சுதந்திரம்
,
சிம்பு
,
சினிமா