சென்னையில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால் சினிமா நட்சத்திரங்கள் தங்களால் முடிந்த உதவிகளை மக்களுக்கு செய்து வருகின்றனர்.
ரஜினிகாந்த் மக்கள் நிவாரண பணிக்காக 10 இலட்சம் தொகையை நடிகர் சங்கத்திற்கு அளித்துள்ளார். மேலும் அவரிடைய ராகவேந்திர கல்யாண மண்டபத்தை மக்கள் தங்குவதற்காக கொடுத்துள்ளார்.
இதே போல் இளைய தளபதி விஜய் தன்னுடையா ஷோபா கல்யாண மண்டபத்தை மக்கள் தங்குவதற்காக கொடுத்துள்ளார். மேலும் அங்கே மக்களுக்காக உணவு,மருத்துவ வசதிகள் மறும் மேலும் பல அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இந்நிலையில் அஜித் மக்கள் நலனுக்காக 60 இலட்சம் ரூபாயும், 3500 போர்வைகள் கொடுத்துள்ளதாகவும் மேலும் வருடைய ரோகிணி ட்ரஸ்ட் மூலமாக மக்கள் தங்குவதற்காக வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
மேலும் நடிகர் அஜீத் நடத்தி வரும் மோகினிமணி டிரஸ்ட், அனாதை ஆசிரமம்,முதியோர் இல்லம்,தொண்டுநிறுவணம், திருமணமண்டபம்,அவரது இல்லம்,இன்று முதல் 2 மாதங்கள் திறந்திருக்கும். தங்குவதற்கு உபயோகித்துக்கொள்ளும்படி நடிகர் அஜீத் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார் என சமூக வலைதளாங்களில் செய்திகள் பரவி வருகின்றன.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
நிவாரண பணிக்கு 60 இலட்சம் அளித்த அஜித்
,
விஜய்