எனக்குள்ஒருவன் படத்தைத் தொடர்ந்து சித்தார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் ஜில்ஜங்ஜக். அவரே தயாரிக்கும் இந்தப்படத்தை தீரஜ்வைத்தி எனும் புதியவர் இயக்குகிறார்.
இந்தப்படத்தின் முதல்பார்வையை அண்மையில் அவர் வெளியிட்டார். அதைத் தொடர்ந்து, படத்தின் குறுமுன்னோட்டம் எனப்படும் டீஸரை வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார். நவம்பர் ஆறாம்தேதி அந்த டீஸரை சிவகார்த்திகேயனும் ஹன்சிகாவும் வெளியிடவிருக்கிறார்களாம்.
இருவரும் மான்கராத்தே படத்தில் சேர்ந்து நடித்திருந்தார்கள். அதன்பின்னர் இருவரும் சேர்ந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்களா? என்று கேட்டால் இல்லையாம். இதற்காகத் தனியாக நிகழ்ச்சி எதுவும் இல்லையென்றும் டிவிட்டரில் இருவரும் இந்தப்பட டீஸரை வெளியிடவிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
Tags:
Cinema
,
சித்தார்த்
,
சித்தார்த் பட டீஸரை வெளியிடும் நடிகர்
,
சினிமா
,
மான்கராத்தே