அஜித் நடிப்பில் இந்த வருடம் என்னை அறிந்தால் படம் வெளியானது.
இது ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார். இப்படம் இந்த வருடம் பிப்ரவரி மாதம் வெளியானது. தற்போது வேதாளம் படமும் இந்த வருடத்திலேயே வெளியாகிறது.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் நடிப்பில் ஒரே வருடத்தில் இரண்டு படங்கள் வெளியாகிறது. இதற்கு முன்னதாக 2007ம் ஆண்டு அஜித் நடிப்பில் ஆழ்வார் ,கிரீடம், பில்லா ஆகிய 3 படங்கள் ஒரே வருடத்தில் வெளியானது. அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு படமே அஜித் நடிப்பில் வெளியானது.
தற்போது தான் அஜித் நடிப்பில் 2 படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகிறது.
Tags:
அஜித்
,
சினிமா
,
வேதாளம் மூலம் 8 வருடத்திற்குப் பிறகு அஜித் சாதனை