அறிமுக இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் ‘க க க போ’. இப்படத்தில் கேசவன் என்ற புதுமுகம் கதாநாயகனாக நடித்துள்ளார். சாக்ஷி அகர்வால், ஆதவன், பவர் ஸ்டார் சீனிவாசன், ரோபோ சங்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் நாயகன் மலேசியாவில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றில் பெற்றோரின் கண்முன்னே இழுத்துச் செல்லப்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
‘கககபோ’ படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் இவர் கலந்து கொண்டுள்ளார். இந்த நிகழ்ச்சியை தனது குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கவே கேசவன் மலேசியா சென்றுள்ளார். சென்ற இடத்தில் நீர்வீழ்ச்சியில் சிக்கி மாயமாகியுள்ளார்.
அவரது உடலை மலேசியா காவல் துறையினர் தேடி வருகின்றனர். அடுத்த வாரம் இப்படத்தின் இசை வெளியீடு நடைபெற இருந்த நிலையில், நாயகன் நீர்வீழ்ச்சியில் அடித்துச் செல்லப்பட்ட செய்தி கேட்டு படக்குழுவினர் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Tags:
Cinema
,
கேசவன்
,
சினிமா
,
நீர்வீழ்ச்சியில் மாயமான கககபோ படத்தின் நாயகன்
,
விஜய்