அட்லி படத்தில் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் மற்றும் சமந்தா நடிக்கிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் விஜய் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு
காக்கி என தலைப்பு வைக்க இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இப்படத்தின் சண்டைக்காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. இது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. விஜய் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி வந்த அட்லி, தற்போது எமிஜாக்சன் சம்மந்தப்பட்ட காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.
இதற்காக விஜய் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பில் இன்று கலந்து கொண்டேன் என்று எமிஜாக்சன் கூறியிருக்கிறார்.
Tags:
காக்கி
,
சமந்தா
,
சினிமா
,
விஜய்
,
விஜய்யுடன் கலந்துக் கொண்ட எமி ஜாக்சன்