முன்னாள் உலக அழகியும், பிரபல நடிகையுமான ஐஸ்வர்யா ராய் பச்சனின் குழந்தை ஆராத்யாவின் பிறந்தநாள் பார்ட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு ஏராளமான பாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அப்படி கலந்து கொண்ட நடிகர், நடிகைகள் பல்வேறு வித்தியாசமான உடைகளை அணிந்து வந்தனர்.
அதிலும் நடிகை ஜெனிலியா அணிந்து வந்த நீல நிற உடையானது வித்தியாசமாக இருந்ததோடு, அவருக்கு சிறப்பான தோற்றத்தையும் கொடுத்தது. சரி, இப்போது நடிகை ஐஸ்வர்யா ராய் மகளின் பிறந்தநாள் பார்ட்டிக்கு நடிகை ஜெனிலியா மேற்கொண்டு வந்த ஸ்டைல் உங்கள் பார்வைக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
நீல நிற உடை
இது தான் பிறந்தநாள் பார்ட்டிக்கு ஜெனிலியா அணிந்து வந்த தளர்வான சட்டை வடிவிலான முழங்கால் அளவுள்ள பங்களோ 8 உடை
ஜெனிலியா மேக்கப்
நடிகை ஜெனிலியா இந்த உடைக்கு மேக்கப் எதுவும் அதிகம் போடாமல், கண்களுக்கு கண் மையும், உதடுகள் மின்னும் வகையிலான லிப் கிளாஸ் போட்டும் வந்திருந்தார்.
ஆபரணங்கள்
நடிகை ஜெனிலியா நீல நிற உடைக்கு சில்வர் நெக்லேஸ் அணிந்து, காதுகளுக்கு சிறிய கம்மல் மற்றும் கைக்கு சில்வர் வாட்ச் அணிந்து வந்திருந்தார்.
காலணி
நீல நிற சட்டை வடிவிலான உடையில் தனது கால்கள் சிறப்பாக வெளிப்பட க்ரே நிற ஸ்னீக்கர்ஸ் அணிந்து வந்திருந்தார்.
நடிகர் ரித்தேஷ்
நடிகர் ரித்தேஷ் இந்த பிறந்தநாள் பார்ட்டிக்கு கருப்பு நிற சட்டை மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்து, கால்களுக்கு நீல நிற ஷூ அணிந்து, தன் மனைவியின் கைகளைப் பற்றியவாறு இருந்தார்.
Tags:
Cinema
,
ஐஸ்வர்யா ராய்
,
சினிமா
,
மேக்கப்பின்றி சிம்பிளாக வந்த ஜெனிலியா