இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘விஜய் 59’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் வில்லனாக பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் நடித்து வருவது நாம் அறிந்ததே. இந்நிலையில் இந்த படத்தில் சத்யராஜ் மெயின் வில்லனாக நடிக்கின்றார் என்ற செய்தியும் கடந்த சில நாட்களாக வெளிவந்தது.
இந்நிலையில் சத்யராஜ் சமீபத்தில் விஜய் குறித்து கூறிய கருத்து ஒன்று தற்போது சமூக இணையதளங்களில் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
எம்.ஜி.ஆர் படங்களுக்கு பிறகு நான் ரசித்து பார்க்கிற படங்கள் விஜய் படங்களைத்தான். வாத்தியார் ஓடி வந்து நின்னாருன்னா குஷி வந்து விசில் பறக்கும். அதுபோல் விஜய் வந்து நிற்கும்போதும் வருகிறது. என்னை பொருத்தவரையில் விஜய் தான் இப்போதைய எம்.ஜி.ஆர்’ என்று கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா
,
விஜய்
,
விஜய் படங்களைத்தான் விரும்பி பார்க்கிறேன்