நடித்த ஒருசில படங்களிலேயே முன்னணி நடிகரானவர் சிவகார்த்திகேயன். இவரது மார்கெட் படத்திற்கு படம் உயர்ந்து வருவதால் பல நடிகர்கள் இவர் மீது காண்டில் உள்ளனர். ஒருபுறம் தனுஷ் இவரை அடக்க நினைக்க, இன்னொரு புறம் விஜய்யும் அத்தகைய அலப்பறையை மேற்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் அட்லீ பற்றிய செய்தி ஒன்று காட்டுத் தீ போல பரவியது. அதாவது அட்லீ, விஜய்59 படத்தை முடித்துவிட்டு அடுத்தது சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படம் எடுக்கவுள்ளார் என்பது தான் அந்த தகவல். அதற்கு இன்னும் வலு சேர்ப்பது போல அமைந்திருக்கிறது அட்லீ-சிவா பிளாஷ்பேக்கும்.
சிவகார்த்திகேயன் ஹீரோவாக வருவதற்கு முன்பிலிருந்தே அட்லீயும் அவரும் நல்ல நண்பர்களாம். அவ்வளவு ஏன்? ராஜா ராணி படத்திலேயே ஆர்யாவுக்கு பதிலாக நடிக்க வேண்டியவர் சிவகார்த்திகேயன்தானாம்.
பிறகு அட்லீ ஒரு திசையும் சிவா ஒரு திசையுமாய் பிரிந்து அவரவர் தகுதியை அவரவர் வளர்த்துக் கொண்டார்கள். இவ்வளவு பின்னணி உள்ள இருவரும் சேர்ந்து ஒரு படத்தை தருவதுதானே சரியாக இருக்கும்? ஆனால் விஜய், அட்லீயிடம் சொல்லி அந்த படத்திலிருந்து பின் வாங்க வைத்துவிட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
Tags:
சிவகார்த்திகேயனுக்கு ஆப்பு வைத்த விஜய்
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
விஜய்59