இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படம் தீபாவளியன்று வெளிவரவுள்ளது. இப்படத்தின் ஃபைனல் காப்பி நேற்று ரெடியானது.
ஃபைனல் காப்பி ரெடியானதும் தல குடும்பத்தினர், நண்பாகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்காக, சென்னையில் உள்ள ஒரு தியேட்டரில் நேற்று சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. வேதாளம் படத்தைப் பார்த்த அஜித் குடும்பத்தினர் படம் மிகவும் நன்றாக உள்ளதாகவும் கண்டிப்பாக சூப்பர் ஹிட்டாகும் எனவும் படக்குழுவினரை பாராட்டியுள்ளனர்.
இந்நிலையில் தமிழக அரசின் வரிச்சலுகையும் வேதாளம் படத்திற்கு நேற்று கிடைத்துள்ளது. இதனால் படக்குழுவினர் இரட்டிப்பு மகிழ்ச்சியில் உள்ளனர். தல ரசிகர்களுக்கும் இந்தச் செய்தி மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
வேதாளம்
,
வேதாளம் படத்தை பார்த்த 'தல' குடும்பத்தினர்