முருகதாஸ் இயக்கி விஜய் நடித்த ‘கத்தி’ படத்தை பிரபல மொபைல் நிறுவனமான லைக்கா தயாரித்திருந்தது. இந்நிறுவனத்தை தெரியாதவர்கள் கூட ‘கத்தி’ படத்திற்கு ஏற்பட்ட எதிர்ப்பின் காரணமாக தெரிந்து கொண்டனர். தற்போது இந்நிறுவனம் தமிழ் படங்களை அதிகளவில் தயாரித்தும் வெளியிட்டும் வருகிறது.
அந்த வகையில் தமிழ் சினிமாவை இல்லை வியாபாரம் ஆகும் படங்களாக பார்த்து வாங்கி லாபம் சம்பாதிக்க பார்க்கும் இந்த நிறுவனம். குறிப்பா தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்கள் படங்களுக்கு குறி வைக்குறார்கள். இவர்கள் மட்டும் இல்லை பல நிறுவனங்கள் இப்படி ஆரம்பித்துள்ளது. இது தமிழ் சினிமாவின் வளர்ச்சியை தடுக்கும் என்பதில் அச்சம் இல்லை. சமீபத்தில் தீபாவளிக்கு ரிலீஸ் ஆன படத்தை வேறு நிறுவனம் வாங்கி கொள்ளை லாபம் சம்பாதித்தது இதனால் தயாரிபாளர்கள் நஷ்டத்தில் தான் போய் நிற்பார்கள்.
இந்நிலையில் தனுஷ் தயாரித்து சமீபத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தின் தமிழக உரிமையை லைக்கா பெற்றிருந்தது. மேலும் தனுஷ் தயாரித்து வெற்றிமாறன் இயக்கிய விசாரணை படத்தின் உலகளாவிய உரிமையையும் இதே நிறுவனம் பெற்றுள்ளது.
மேலும் வருகிற டிசம்பர் 18ஆம் தேதி வெளியாகவுள்ள தனுஷின் ‘தங்க மகன்’ படத்தின் வெளியீட்டு உரிமையையும் பெற்றுள்ளது. தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் உரிமையையும் இதே நிறுவனம் பெறப்போவதாக செய்திகள் வந்துள்ளன.
அதற்கான பேச்சுவார்த்தை தற்போது நடைபெற்று வருகிறதாம். இப்படத்தில் சிம்பு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்களை டிசம்பரில் வெளியிடவுள்ளனர். அடுத்த வருடம் பொங்கலுக்கு படம் ரிலீஸ் ஆகிறது.
Tags:
Cinema
,
Development
,
Tamil Cinema
,
Tamil Cinema Development
,
சினிமா
,
தமிழ் சினிமா