இரண்டு வருடங்களுக்கு முன் நண்பர்களாகவும் பின்னர் காதலர்களாகவும் உலா வந்தவர்கள் சித்தார்த் மற்றும் சமந்தார். இருவரும் ஒன்றாக இனைந்து காளஹஸ்தி கோயிலுக்கு சென்று தோஷ நிவர்த்தி செய்த புகைப்படங்களெல்லாம் வெளியாகி இருவரும் விரைவில் திருமணம் புரிந்து கொள்ள போவதாக செய்திகள் உலா வந்த நிலையில், மனகசப்பினால் இருவரும் பிரிந்தனர்.
பின்னர் தனது படங்களில் கவனம் செலுத்தி வந்த நிலையில் சித்தார்த் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்த ட்வீட் சர்சையை கிளப்பியது. அதில் “That moment when you realise that what you thought was the worst thing that happened to you is actually the best thing that happened to you.” அதாவது ‘அந்தநேரம் உனக்கு கெட்டது நடந்தது என்று நினைத்திருப்பாய் ஆனால் உண்மையில் நல்லதுதான் நடந்திருக்கிறது’ என தெரிவித்திருந்தார்.
இவர் எதை பற்றி சொல்லுகிறார் என அவரை பின் தொடர்பவர்கள் குழம்பிய நிலையில் அதற்க்கு பதிளளிக்கும் வகையில் சமந்தா தனது ட்வீட்டை பதிவு செய்திருந்தார். அதில் "“That moment when I realise you're just somebody I used to know.” அதாவது ’அந்த நேரம் மற்ற யாரோ ஒருவர் போலவே உன்னையும் நான் உணர்ந்தேன்’ என சித்தார்த்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தெரிவித்திருந்தார். இதனையடுத்து இவர்களிருவருக்குமிடையேயான சண்டை டிவிட்டர் வரை வந்தது.
இது நடந்த கொஞ்ச நேரத்திலேயே தனது டீவிட்டை நீக்கி விட்டார் சமந்தா. ஆனால் அவர் கூறியதை பலரும் ரீ-டிவீட் செய்ய அது வைரலாக பரவி வருகிறது. ஊர் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்.
Tags:
Cinema
,
சமந்தா
,
சித்தார்த்
,
சித்தார்த் - சமந்தா சண்டை
,
சினிமா