தமிழில் வெற்றி பெற்ற 'தனி ஒருவன்' படம் தெலுங்கில் தயாராகிறது. ராம்சரண் கதாநாயகனாக நடிக்கிறார்.
தமிழில் வில்லனாக நடித்த அரவிந்தசாமியை தெலுங்கு படத்திலும் நடிக்க வைக்க முடிவு செய்தார்கள். இதற்காக, தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், அரவிந்தசாமியை அணுகினார்.
அவரிடம், அரவிந்தசாமி ரூ.3 கோடி சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது. அதைக்கேட்டு அல்லு அரவிந்த் அதிர்ச்சி அடைந்தார். அரவிந்தசாமிக்கு பதில் மாதவன், சுதீப் ஆகிய இருவரில் ஒருவரை நடிக்க வைக்க முயற்சி நடக்கிறதாம்.
Tags:
Cinema
,
அதிர்ச்சியடையவைத்த அரவிந்தசாமி
,
அரவிந்தசாமி
,
சினிமா