விஷால், ராதாரவிக்கு இடையே இருந்த மோதல் எல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் இந்த சண்டைகளை எல்லாம் மறந்து இருவரும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளனர்.இப்படத்தை கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கவுள்ளார்.
ஏன் இந்த படத்தில் ராதாரவி நடிக்க சம்மதித்தார் என இயக்குனரே கூறியுள்ளார்.
அவர் கூறுகையில் ’கதையை தயார் செய்யும் போதே இந்த கதாபாத்திரத்திற்கு ராதாரவி தான் சரி என்று மனதில் பட்டது, அவரிடம் போய் இதை சொல்ல, ஹீரோவிற்கு சம்மதம் என்றால் நான் நடிக்கிறேன் என்றார்.
விஷாலும், கதைக்கு தேவை என்றால் அவரையே கமிட் செய்யுங்கள் என்று கூற, ராதாரவியும் முழு மனதுடன் நடிக்க சம்மதித்து விட்டார்’ என கூறியுள்ளார்.
Tags:
Cinema
,
சினிமா