இந்த மானங்கெட்ட மாப்பிள்ளை இருக்கானே அவனுக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லையோ… பூமிகாவுக்குத்தான் சரவணன் கூட கல்யாணம் நடக்கப்போகுதே அப்புறம் ஏன் இப்படி எல்லாம் செய்யறான் என்று சன்டிவியின் ‘பிரியமானவள்’ சீரியலைப் பார்த்து கடந்த ஒருவாரமாக புலம்பித்தீர்த்தனர் இல்லத்தரசிகள். சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மழை, வெள்ளத்தைப் போட்டு
சோக மியூசிக் எல்லாம் சேர்த்து செய்திச்சேனல்கள் ஒருபக்கம் டிஆர்பியை ஏற்றிக்கொண்டிருக்க, அதைப்பற்றி எங்களுக்கு என்ன நாங்க சீரியல் பார்ப்போமே என்று கண்ணும் கருத்துமாக டிவி சீரியல்களில் கவனம் செலுத்தினர் பிற மாவட்ட மக்கள். சன் டிவியில் இரவு 9 மணிக்கு
ஒளிபரப்பாகும் பிரியமானவள் தொடர்தான் இப்போதைக்கு ஹாட் டாபிக். அதிலும் கல்யாணத்தை நிறுத்தவும் குடும்பத்தைக் கெடுக்கவும், கூட இருந்தே குழிபறிக்கும் கூட்டம் செய்யும் வில்லத்தனம்தான் மெயின் கதையே.
ஆனால் தற்போது பாபநாசம் படத்தின் கதையை சுட்டு சீரியலில் சீன் வைத்து விட்டார் இயக்குநர்.
அவந்திகா கல்யாணம் அழகான உமாவிற்கு தொழிலதிபர் கிருஷ்ணன் கணவராக கிடைக்க அவர்களுக்கு நடராஜ், திலீபன், சரவணன், பிரபாகரன் ஆகிய 4 மகன்கள். மூத்த மகன் நடராஜ்க்கு பெரும் போராட்டத்திற்கு இடையே அவந்திகா உடன் திருமணம் நடைபெற்றது.
பூமிகா – சரவணன் அவந்திகாவின் தங்கை பூமிகாவிற்கும் திருமணம் நிச்சயமாகிறது. ஒரே வீட்டில் அக்கா, தங்கைகள் வாழ்க்கைப்பட இருக்கிறார்கள். பூமிகாவை திருமணம் செய்ய அவந்திகா உடன் மோதிய மானங்கெட்ட மாப்பிள்ளை சதீசும் … கிருஷ்ணனின் நண்பன் மகன் கண்ணனும் போட்டி போடுகின்றனர்.
கல்யாணத்தை நிப்பாட்டு டிவி சீரியல் எல்லாத்திலும் ஒரே கதைதான் திருமணத்தை நிறுத்த செய்யும் வில்லத்தனங்கள்தான். இந்த சீரியலிலோ இயக்குநர் அதிகம் மெனக்கெடவில்லை. பாபநாசம் படத்தின் கதையை கையில் எடுத்துக்கொண்டார்.
குளியல் சீன் வீடியோ பூமிகாவின் வீட்டிற்குள்ளேயே போய் பாத்ரூமில் போய் கேமரா செட் செய்து அதை வீடியோவில் பதிவு செய்து சரவணனை மிரட்டுகிறான் மானங்கெட்ட மாப்பிள்ளை சதீஷ். அதைக் கேட்டு சரவணனும் திருமணத்தை நிறுத்த பெற்றோரிடம் சொல்லவே… கதை சூடுபிடிக்கிறது.
நல்லா சொல்றாங்கப்பா டீடெயில்லு திருமண தினத்தன்று சரவணனை கடத்த ஆள் செட் அப் செய்கிறான் சதீஷ்… அதேபோல சதீஷை கடத்த ஏற்பாடு செய்திருக்கிறான் கண்ணன். இது தெரியாமல் கல்யாண ஏற்பாடுகள் பிசியாக நடக்க போலீசை நாடுகிறான் சரவணன்.
பாபநாசம் காப்பி இதை பார்த்த சதீஷ், பாபநாசம் படத்தில் வருவது போல தனது செல்போனில் உள்ள சிம்கார்டை கழற்றி மற்றொரு செல்போனில் போட்டு அதை வடமாநிலத்திற்கு செல்லும் லாரியில் போடச்சொல்கிறான். இந்த சீரியலில் குளியல் சீன் தொடங்கி… செல்போனை லாரி மீது போடுவது வரை பாபநாசம் படத்தில் இருந்து சுட்டுவிட்டார் இயக்குநர்.
அடுத்த திட்டம் மிரட்டல் இது சரிப்படாது என்று உணர்ந்த சதீஷ், மணப்பெண் பூமிகாவை அழைத்து நேரடியாக மிரட்ட… அதைக் கேட்டு பூமிகா அழ… பூமிகாவைத் தேடி வந்த அத்தை உமாவோ அதிர்ச்சியடைகிறாள். கடைசியில் கட்டையால் அடித்து செல்போனை உடைத்து மானங்கெட்ட மாப்பிள்ளையின் கதையை முடிக்கின்றனர்.
சிக்கலில் கல்யாணம் எது எப்படியோ பூமிகா – சரவணன் திருமணம் நடந்தால் ஒரு உயிர்பலி ஏற்படும் என்று ஜாதகத்தில் சொன்னபடி மானங்கெட்ட மாப்பிள்ளையை போட்டுத்தள்ளிவிட்டார்கள். பூமிகா திருமணம் நடக்குமா? உமாவின் நிலை என்னவாகும் என்ற பரபரப்பான எதிர்பார்ப்புகளோடு பயணிக்கிறது பிரியமானவள் தொடர்.
இன்னொரு பூமிகாவிற்கும் சிக்கல் வம்சம் தொடரில் டாக்டர் மதனின் மனைவி பூமிகாவும் தன்னை கொல்ல வந்த டாக்டரை தள்ளிவிட்டு இப்போது கொலைப்பழிக்கு ஆளாகியுள்ளார். சிறையில் இருக்கும் பூமிகா தப்புவளா? சங்கரி குரூப் பூமிகாவை காப்பாற்றுவார்களா பார்க்கலாம் என்று எதிர்பார்ப்போடு இருக்கின்றனர் அடாத மழையிலும் விடாமல் டிவி பார்க்கும் சங்கத்தினர்.
Tags:
Cinema
,
Priyamanaval
,
சினிமா
,
பிரியமானவள்