ஆரம்பம் படத்தின் படப்பிடிப்பின் போது கார் சேசிங் சண்டைக் காட்சியில் அஜித்தின் வலது முழங்காலிலும் தோள்பட்டையிலும் பலத்த காயம் ஏற்பட்டு அஜித்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
அதன் பின் அடிக்கடி வலி ஏற்பட்டதால் மருத்துவர்கள் ஆலோசித்து உடனடியாக அறுவை சிகிச்சை செய்துகொண்டால் குணமடைய முடியும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் அஜித் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்ததால் உடனடியாக அபரேஷன் செய்துகொள்ளாமல் தள்ளிக்கொண்டே போனது. இந்நிலையில் சிவா இயக்கத்தில் வேதாளம் படப்பிடிப்பின் கடைசி நாள் ஷூட்டிங்கில், முன்னர் அடிபட்ட இடத்திலேயே மீண்டும் அடிபட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து உடனடியாக ஆபரேஷன் செய்யவேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். எனவே வருகிற 24ம் தேதி ஆபரேஷன் நடத்த முடிவுசெய்துள்ளனர்.
இந்நிலையில் அதிகமான வலியின் காரணமாக நேற்று காலை சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் மூட்டுவலி அறுவைசிகிச்சை பிரிவில் அஜித் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து மாலை அறுவைசிகிச்சை தொடங்கி ஆறுமணிநேரம் நடந்தது.
தற்பொழுது அஜித் நலமுடம் இருக்கிறார். மேலும் ஓரிரு தினங்களில் வீடு திரும்புவார் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
Operation Complete Ajith is Fine
Tags:
Cinema
,
Operation Complete Ajith is Fine
,
அஜித்
,
சினிமா