திருப்பதி கோவிலில் தல... உடைந்த காலுடன் வரிசையில் நின்ற அஜித் (வீடியோ)
அஜித் தன் ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரிலீஸிற்கு முன் திருப்பதி சென்று தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். சமீபத்தில் வீரம் படம் சூட்டிங் முடிந்து ரிலீஸ் ஆகும் முன்னர் டைரக்டர் சிவாவுடன் திருப்பதி சென்றார்.
இதனால் அவரின் படம் வெற்றி பெரும் என்ற பாஸிட்டிவ் நம்பிக்கை இருந்தது. தற்போது இவர் நடித்துள்ள வேதாளம் திரைப்படம் ரிலீஸீக்கு முன்னரும் திருப்பதி சென்றுள்ளார். நேற்று இரவு கார் மூலமாக சென்னையில் இருந்து புறப்பட்ட அஜித், நள்ளிரவு திருமலை சென்றடைந்துள்ளார்.
பின்னர் திருமலை பத்மாவதி பகுதியில் உள்ள விடுதியில் ஓய்வு எடுத்துவிட்டு, காலில் அடிபட்டிருப்பதைக் கூட பொருட்படுத்தாமல் இன்று அதிகாலை சுப்ரபாத சேவையில் பக்தர்களுடன் பக்தராக வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்துள்ளார் அஜித். இவருடன் இயக்குனர் சிவாவும் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.