புலி படம் தோல்வியடைந்ததால் அடுத்து உடனடியாக ஒரு வெற்றிப்படம் கொடுத்தாக வேண்டும் என்று விஜய் முடிவு செய்துள்ளாராம். இதனால் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பை விறுவிறுப்பாக நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ‘வேதாளம்’ தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் விஜய் ஜோடியாக நடிக்கும் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் நடிக்க ஸ்ருதிஹாசனுடன் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், ஆனால் இவர் மீண்டும் விஜய்யுடன் நடிக்க தயங்குவதாகவும் கூறப்படுகிறது.
தமிழில் ஸ்ருதிஹாசன் நடித்த 3, ஏழாம் அறிவு, பூஜை, புலி ஆகிய படங்களில் இதுவரை எந்த படமும் சூப்பர் ஹிட் ஆகவில்லை.
அதனால் அவரது கவனம் முழுவதும் தெலுங்கு மற்றும் இந்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் இன்னொரு முன்னணி நடிகையுடனும் பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவரும் ”விஜய் படத்தில் நடித்தால் தனது நடிப்புக்கு பெரிதாக வேலையிருக்காது” என்று மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
விஜய் படத்தில் நடிக்க நான், நீ என்று போட்டி போட்டும் வரும் நிலையில் இந்த நடிகைகள் இப்படி சொன்னது பெரும் அதிர்ச்சியாக இருப்பதாக கோலிவுட் பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
                        Tags:
                      
Cinema
                          , 
                        
சினிமா
                          , 
                        
நடிகைகள்
                          , 
                        
விஜய்