சிவா இயக்கத்தில் அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமிமேனன், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் வேதாளம். இப்படம் தீபாளிக்கு வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.
இப்படத்தின் டீசர் நேற்று வெளிவருவதாக இருந்தது. ஆனால், திடிரென்று டீசர் அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் வருத்தத்தில் ஆழ்ந்தனர். விஜய்யின் புலி படத்தை பார்த்த பிறகு இவர்களின் உற்சாகத்திற்கு அளவில்லாமல் போனது…
வேதாளம் டீசர் வெளிவராததற்கு முக்கிய காரணம் விஜய்யின் வீட்டில் நடந்த வருமான வரி சோதனை தான் என்று சொல்லப்படுகிறது.
‘இப்படி ரெய்டு நடக்கும் நேரத்தில் டீசரை வெளியிடுவது நாகரீகம் இல்லை, இது விஜய் தரப்பை மிகவும் சங்கடப்படுத்திவிடும்’ என அஜித் வேண்டாம் என்று கூறிவிட்டாராம்.
Tags:
Cinema
,
சினிமா
,
வேதாளம் டீசர்