ஒவ்வொரு படத்துக்கும் ஒவ்வொரு ஓட்டை! ஹிட்டோ ஹிட் அடித்த தமிழ் சினிமாக்கள்ல சிலவற்றை இப்போ பார்க்கிறப்போ, செம காமெடியா தோணும். அப்படி சில படங்களும் அந்த லாஜிக் மிஸ்டேக்ஸும்… ‘பாட்ஷா’.
இந்தப் படத்தைப்போல மரண மாஸ் ஹிட் அடித்த படம் தமிழ் சினிமாவில் இருக்கா என்ன? ஆனால், படம் பார்த்து கன்ஃபியூஸ் ஆகி சந்தேகம் வருவது எனக்கு மட்டும்தானா? ரஜினி இந்தப் படத்தில் ஃப்ளாஷ் பேக்கில் கொஞ்சம் மெச்சூர்டான ஆளாக தாடி வைத்து வித்தியாசமான டானாக இருப்பார். அதே ஆள் நிகழ்காலத்தில் செம யூத்தாக ஆட்டோ ஓட்டிக்கொண்டு இருப்பார். ஃப்ளாஷ்பேக்கில் இருந்த ரகுவரன், தேவன் போன்ற ஆட்கள் வயதாகித் தலை நரைத்துப்போய் இருப்பார்கள். தேவனின் மகள் வளர்ந்து நக்மாவாக ஆகும்போது பாட்ஷாவுக்கும் வயசு ஆகவே ஆகாதா பாஸ்? அப்படியே ஃபைனல் இயர் பி.இ அரியர் எழுதுபவரைப்போல யூத்தாய் இருப்பார் சூப்பர் ஸ்டார்.
ஒருவேளை பத்து வயசு ஆனா, ஒரு வயசு ஆன மாதிரியோ? ‘சின்னத்தம்பி’ படத்துல ஓபனிங் சீன்லேயே நாலு அண்ணன்கள் இருக்கிற வீட்ல தங்கச்சி ஒண்ணு பொறக்குதுனு காட்டுறாங்க. ஊரே கொண்டாடித் திருவிழா போல புது ட்ரெஸ் எல்லோருக்கும் கொடுத்து அகமகிழ்றாங்க அண்ணன்கள். தங்கச்சி பொறந்துச்சு ஓகே. அவுங்க பேரன்ட்ஸ் எங்கே? அவுங்க அப்பாவே ஒருவேளை இல்லாம இருந்திருந்தால்கூட அம்மா இருக்கணுமே… டெலிவரியில செத்துப்போயிருந்தாலும் அது துக்கவீடுதானே? அப்புறம் எதுக்கு விழா எடுத்து விமரிசையா கொண்டாடுறாங்க?
‘அருணாச்சலம்’ படத்துல 30 நாள்ல 30 கோடி செலவு பண்ண ஹீரோ ரஜினிகாந்த் ரொம்ப கஷ்டப்படுறார். கடைசி நேரத்துல மிஞ்சுற காசைக்கூட ரம்பாவோட சம்பளம்னு சொல்லி கணக்கை டேலி பண்றார். என்ன சந்தேகம்னா, இருக்கிற மொத்தக் காசையுமே ரம்பாவோட சம்பளம்னு சொல்லிக் குடுத்திருந்தா, ஒரே நாள்ல செலவு பண்ணியிருக்கலாமே? அதுக்கு ஏன் ஒருமாசம் வெயிட் பண்ணணும்?
‘கும்கி’ படத்துல ஒரு சீன்ல குடிக்கிறதுக்காக சைட் டிஷ்ஷை யானையை வெச்சுத் திருடுவாரு தம்பி ராமைய்யா. அதைப் பார்த்திட்டு அவரைத் திட்டும் விக்ரம் பிரபு, ‘என் தம்பியை நான் செத்தபிறகு பத்திரமா பார்த்துக்கனு எங்க அம்மா சொன்னதாலதான் உன்னை என்கூட வெச்சு கஞ்சி ஊத்திக்கிட்டு இருக்கேன்’ என்பார். அதற்கு தம்பி ராமைய்யா, ‘நானும் அப்படித்தான். என் தங்கச்சி சொன்ன ஒரே வார்த்தைக்காகத்தான் நான் உன்கூட இருக்கேன்’னு சொல்வார். ஒரே சீன்ல ஒரே நிமிஷத்துக்குள்ள அக்கா எப்படி தங்கச்சி ஆனாங்க…?
இதைச் சொன்னா நம்மளை…
Tags:
Cinema
,
சினிமா