குழந்தைகளின் கல்வி கட்டாயம் என்பதனை மையப்படுத்தி எத்தனை படைப்புகள் வந்தாலும், அந்த கருத்து படைப்புகளுடனே போய்விடுகிறது.
குழந்தைகளுக்கான கல்வி என்பது சமூகத்துக்கு எவ்வளவு முக்கியமான ஒன்று என்பதனை அனைவரும் அறிந்திருந்தாலும், யாரும் அதற்காக பாடுபடுவது இல்லை.இந்த குறும்படத்திலும் வீட்டுச் சுமையினால் செருப்புகளை தைக்கும் ஒரு சிறுவன்.
ஆனால் அவனுக்கும் பள்ளிக்கூடம் போக வேண்டும் என்று ஆசை.இறுதியில் குறும்படத்தில் அவனின் நிலை என்ன ஆகிறது என்பதே மீதிக் கதை.