தமிழ்பட உலகில் 1980 மற்றும் 1990-ம் ஆண்டுகளில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் குஷ்பு. டைரக்டர் சுந்தர்.சியை மணந்தபிறகு அக்காள், அண்ணி வேடங்களில் நடித்தார். தற்போது காங்கிரசில் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு உள்ளார்.
சினிமாவில் நடிப்பதை நிறுத்தியுள்ளார். குஷ்பு தனது டுவிட்டர் பக்கத்தில் ரசிகர்களிடம் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஒரு ரசிகர் ரஜினிகாந்த் பற்றி உங்கள் கருத்தை சொல்லுங்கள் என்று கேட்டார்.
இதற்கு பதில் அளித்த குஷ்பு, ரஜினிகாந்த் தான் எப்போதுமே சூப்பர் ஸ்டார். அவருடைய இடத்தை யாராலும் பிடிக்க முடியாது என்றார். ரஜினியுடன், குஷ்பு‘அண்ணாமலை, மன்னன், பாண்டியன், தர்மத்தின்தலைவன்’ போன்ற படங்களில் நடித்து உள்ளார். டுவிட்டரில் குஷ்பு மேலும் கூறியதாவது:-
எனக்கு பிடித்தமான படம் மவுனராகம். நான் நிறைய தடவை பார்த்தது அந்த படத்தைத்தான். எனக்கு பிடித்த நடிகர் விஷால். நடிகர் அஜீத் பற்றி என்னிடம் கருத்து கேட்டால் அவரை என்னுடைய ஜார்ஜ் க்ளூனி (ஹாலிவுட் நடிகர்) என்பேன்.
நடிகர் விஜய்யை வைத்து சுந்தர்.சி விரைவில் படம் இயக்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. தெலுங்கு நடிகர்களில் ஜுனியர் என்.டி.ஆர்., பிரபாஸ் இருவரும் எனக்கு பிடித்தமானவர்கள்.
இவ்வாறு குஷ்பு கூறியிருக்கிறார்.
Tags:
Cinema
,
சினிமா