சிக்கலில் மாட்டித்தவித்த சிம்புவின் ‘வாலு’ படத்தின் ரிலீஸுக்காக விஜய் உதவி செய்ததாக அனைத்து ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகியுள்ளது.
அதாவது தமிழகத்தின் பிரபல விநியோகிஸ்தர்களிடம் விஜய்யே நேரடியாக பேசி ‘வாலு’ படத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டுகோள் விடுத்ததாகவும் இதன் காரணமாக ‘வாலு’ படத்தின் அனைத்து ஏரியாக்களும் நல்ல விலைக்கு விற்பனை ஆகியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. அதேசமயம் அஜித்தின் வெறித்தனமான ரசிகரான சிம்புவை, அஜித் கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் செய்திகள் வெளியானது.
இந்நிலையில் இதுகுறித்து சிம்பு தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ‘வாலு’ படம் நல்லபடியாக ரிலீஸாக வேண்டும் என்று அஜித், விஜய் இரண்டு பேருமே சப்போர்ட் செய்துள்ளனர் என்றும் அவர்கள் இருவருக்கும் நன்றி என்றும் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
சிம்புவின் இந்த டுவிட்டை மையப்படுத்தி, ‘பிறருக்கு உதவி செய்துவிட்டு அதை விளம்பரம் செய்வது அஜித்துக்கு பிடிக்காத செயல் என்றும், அஜித் ‘வாலு’ படத்திற்காக செய்த உதவியை வெளியே பறைசாற்றிக்கொள்ள விரும்பவில்லை என்றும் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Tags:
Cinema
,
vaalu full movie watch online free
,
Vaalu Movie Online
,
vaalu movie online watch free
,
சினிமா
,
வாலு விமர்சனம்