தல-தளபதி ரசிகர்கள் சண்டை அரசியலாகிவிட்டது- SAC அதிரடி கருத்து..!!

1:31 AM |
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்கள் வட்டத்தை வைத்திருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித். இவர்கள் என்ன தான் நண்பர்களாக இருந்தாலும் அவர்களுடைய ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் ஒரு உலகப்போரையே நடத்தி விடுவார்கள்.

இந்நிலையில் விஜய்யின் தந்தை SAC இதுக்குறித்து கூறுகையில் ‘அவர்கள் இருவரும் எப்போதும் நண்பர்கள் தான், குடும்ப விழாக்களுக்கு செல்கிறார்கள்.

ஆனால், ஒரு சிலர் இணையத்தில் இதை ஒரு தொழிலாகவே செய்கிறார்கள், தற்போது இது அரசியலாகிவிட்டது. சிலரது தூண்டுதலால் இப்படி செய்கிறார்கள்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

தல பற்றி தளபதி ரசிகர்கள், தளபதி பற்றி தல ரசிகர்கள் கூறியது என்ன?

1:33 AM |
தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் விஜய், அஜித் தான். இவர்களுக்கு பின் இருக்கும் ரசிகர்கள் பலத்தை நாங்கள் சொல்லி தெரிய வேண்டியது இல்லை.

இந்நிலையில் இன்று தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று விஜய்-அஜித் ரசிகர்கள் குறித்து ஒரு நிகழ்ச்சி நடத்தியது.

இதில் அஜித்திடம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்தது, விஜய்யிடம் அஜித் ரசிகர்களுக்கு பிடித்தது என்ன என்று ஒரு கேள்வியை முன் வைத்தனர்.இதற்கு விஜய் ரசிகர்கள் ‘அஜித்தின் தன்னம்பிக்கையும், அதிரடியும் பிடிக்கும்’ என்றனர். அஜித் ரசிகர்கள் ‘விஜய்யின் நடனமும், துணிச்சலும் பிடிக்கும்’ என்று கூறினர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com