அஜித்தை வைத்து வீரம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய சிவா அவருடைய அடுத்தபடத்தையும் இயக்கப்போகிறார் என்று சொல்லப்படுகிறது. அஜித் இப்போது ஓய்வில் இருக்கிறார்.
ஓய்வு முடிந்தவுடன் சிவா இயக்கும் படத்தில் நடிக்கவிருக்கிறார் அந்தப்படத்தை சத்யஜோதிபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுதான் நடக்கும் என்று உறுதியாகச் சொல்கின்றனர் திரையுலகினர். ஆனால் அதில் தற்போது ஒரு சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இயக்குநர் சிவா, தமிழில் முதல்படம் இயக்க வந்தபோது அந்தப்பட நிறுவனத்துக்கு இன்னொரு படம் இயக்குவதாக ஒப்புக்கொண்டு முன்தொகையும் வாங்கியிருந்தாராம் சிவா. ஆனால் தொடர்ந்து அஜித்தோடு பணியாற்றுவதால் அவர் சொல்கிற தயாரிப்பாளர்களுக்கே படம் பண்ணும் நிலை அமைந்துவிட்டது. அடுத்தபடமும் வேறு தயாரிப்பாளருக்கே இயக்குகிறார் என்ற செய்தி வந்தவுடன், எங்கள் நிறுவனத்தில் போட்ட ஒப்பந்தத்தை மதிக்காமல் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்களே என்று தயாரிப்பாளர் தரப்பிலிருந்து கேட்டிருக்கிறார்கள்.
இந்தவிசயம் தெரிந்த இப்போதைய தயாரிப்புநிறுவனம் அந்தச்சிக்கலைச் சரிசெய்துவிட்டு வாருங்கள் என்று இயக்குநரிடம் சொல்லியிருக்கிறார்களாம். அதனால் முதல்படத் தயாரிப்பாளரோடு பேச்சுவார்த்தையில் இருக்கிறாராம் இயக்குநர். சிக்கல் சரி செய்யப்பட்டுவிடுமா?
Tags:
Ajith
,
Cinema
,
Vedalam
,
அஜித்
,
சிவா
,
சினிமா
,
வீரம்
,
வேதாளம்