சேலத்தில் பத்திரிகையாளரை அடித்த விஜயகாந்த்! (வீடியோ)

2:14 AM |
சேலத்தில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார்.

அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை நாக்கை துருத்தி கையை ஓங்கினார். அதோடு மட்டுமின்றி, தன்னை அழைத்து சென்ற பாதுகாவலரையும் விஜயகாந்த் நாக்கை துருத்தி தாக்கியதால், சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

மேலும் வாசிக்க…

நடிகர் சங்கத்துக்கான நிதியை மக்கள் கிட்ட வசூலிக்கக் கூடாது- அஜித் அதிரடி..!!

10:39 PM |
ஒரு குட்டி பிளாஷ்பேக் முதல் முதலில் நடிகர் சங்கம் பெரும் கடனை அடைந்த போது அன்றைய தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் அஜித் சொன்ன வார்த்தைகள் இதோ…,

அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் எவ்வளவோ முயன்றும்கூட அஜீத் வர மறுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அவரை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் அஜீத்தே நடிகர் சங்க அலுவலகத்துக்கு வந்தார்.

நேராக விஜயகாந்தைப் பார்த்து, ‘நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க ஏன் மக்களிடம் வசூலிக்க வேண்டும்? நாடு விட்டு நாடு போய் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் போய் நாம் பணம் கேட்கக் கூடாது. அதைவிட நடிகர்களாகிய நாமே அந்தக் கடனை அடைத்துவிடலாம். இதோ என் பங்களிப்பு ரூ 10 லட்சம். அதற்கான செக்கை இப்போதே தருகிறேன். இதேபோல மற்ற நடிகர் நடிகைகளிடம் அவரவர் சக்திக்கு தகுந்தபடி வசூலிக்கலாம். கடனை அடைக்க தேவையான நிதி தானாகக் கிடைத்துவிடப் போகிறது,” என்று கூறினார்

செக்கைக் கொடுத்துவிட்டுப் போனாராம். இதை விஜயகாந்த் ஏற்கவில்லை. அந்த செக்கையும் பயன்படுத்தவில்லை. திட்டமிட்டபடி கலைநிகழ்ச்சி நடத்தி, சிங்கப்பூர்வாசிகளிடம் நல்ல வசூலும் பார்த்தார்கள்.

இப்போது நட்சத்திர கிரிக்கெட் நடத்தி, தமிழகம் முழுக்க வசூல் வேட்டை நடத்த நடிகர் சங்கம் தயாராகி வரும் சூழலில், இந்த ப்ளாஷ்பேக்தான் நினைவுக்கு வருகிறது!
மேலும் வாசிக்க…

விஜயகாந்த் ஜாலியா மேடையில் ஆடுவதை பார்த்திருக்கீங்களா???

11:27 PM |
மேலும் வாசிக்க…

விஜயகாந்துக்கு மற்றவர்களை அடிக்கும் பழக்கத்துக்கு காரணம் விஜயின் அப்பா - ராதிகா அதிரடி பதில்..!!

10:44 PM |
ராதிகா நேற்று எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள நையப்புடை டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.

அப்போது பேசிய அவர், எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் நிறைய படத்தில் நான் நடித்திருக்கிறேன். சார் ரொம்ப கோபக்காரர், உதவியாளர்கள் படக்குழுவினர் என அவர்கள் மேல் உள்ள உரிமையார் பலரை அவர் அடித்திருக்கிறார்.

விஜயகாந்த் பலரை அடிக்கிறார் என்றால் அதற்கு காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர். இருவரும் நிறைய படங்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தான் அடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் ஒருவரை அடித்தார் என்று கேள்விப்படும் போதெல்லாம், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தான் என் நினைவுக்கு வருவார் என்றார்.
   
மேலும் வாசிக்க…

கேப்டனுக்கு கிடைத்த மெகா பரிசு..!!

2:04 AM |
கேப்டன் என்றாலே தமிழக மக்கள் அனைவருக்கு தெரியும் அது விஜயகாந்த் தான் என்று. நேற்று விஜயகாந்த் - பிரேமலதா ஆகியோரின் 26-வது திருமண நாள்.

இதற்காக அப்பாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்க வேண்டும் என்று அவருடைய மகன்கள் ஷன்முக பாண்டியன் மற்றும் விஜய் பிரபாகர் ஃபோர்டு எண்டேவர் காரை பரிசாக அளித்துள்ளனர்.

இந்த காரின் ஆரம்ப விலையே ரூ 24.75 லட்சமாம். பிறகு என்ன கேப்டன் சந்தோஷமாக அந்த பரிசை பெற்றுக்கொண்டார்.


மேலும் வாசிக்க…

விஜயகாந்த் வராட்டி விஜய்.. திமுகவின் "தெறி" பிளான்..!!

9:55 PM |
அதிமுக ஆட்சியில் தன் படங்களுக்கு ஏற்பட்ட சிக்கல்களை மனதில் கொண்டு, வரும் சட்டசபைத் தேர்தலில் திமுகவின் பிரச்சார பீரங்கியாக செயல்பட நடிகர் விஜய் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.ரஜினிக்கு அடுத்தபடியாக தமிழில் தனக்கென அதிக ரசிகர் மன்றங்களைக் கொண்டிருப்பது நடிகர் விஜய் தான்.

எனவே, அவர் தனது ரசிகர் மன்றங்களைப் பயன்படுத்தி அரசியலில் பிரவேசிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.அதேபோல், கடந்த 2011 சட்டசபைத் தேர்தலின் போது அதிமுகவுக்கு ஆதரவாக விஜய் செயல்பட்டார். அவரது தந்தையும் அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். விஜய் ரசிகர்களும் அதிமுகவுக்கு ஆதரவாகவே தேர்தல் பணிகளில் ஈடுபட்டனர்.

பிரச்சினையில் சிக்கிய தலைவா...
ஆனால், ஆட்சியில் அமர்ந்ததும் அதிமுகவின் செயல்பாடுகள் விஜய் தரப்பிற்கு எதிராகவே அமைந்தன. அவரது தலைவா, துப்பாக்கி உள்ளிட்ட படங்கள் பிரச்சினையில் சிக்கிய போது, விஜய்க்கு ஆதரவாக அதிமுக உதவிக்கரம் நீட்டவில்லை.

அதிருப்தி...
முதல்வரைச் சந்திக்கச் சென்ற விஜயின் அப்பாவும், பிரபல இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகருக்கும் அப்பாயின்மெண்ட் கிடைக்கவில்லை. இதனால் விஜய் தரப்பிற்கு அதிமுக அரசு மீது அதிருப்தி ஏற்பட்டது.

தெறிக்க விடலாமா...?
அதன் எதிரொலியாகவே விஜயின் புலி படத்தில் ஆளும் கட்சிக்கு எதிரான வசனங்கள் இடம் பெற்றிருந்ததாக நம்பப்படுகிறது. விஜயின் புதிய படமான தெறியிலும் அரசுக்கு எதிராக தெறிக்க வைக்கும் வசனங்கள் இடம் பெற்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

விஜயின் ஆதரவு...
இந்த சூழ்நிலையில், தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, விஜயின் ஆதரவைப் பெற அனைத்துக் கட்சிகளும் ஆர்வம் காட்டி வருகின்றன.

திமுக பக்கம்...
விஜய் தரப்பு இம்முறை திமுகவிற்கு ஆதரவாகச் செயல்படத் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக திமுக தரப்பையும் அவர்கள் சந்தித்து பேசியிருப்பதாக நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரச்சார பீரங்கி...
அதிமுக அரசை டார் டாரென கிழிக்கும் வகையில், திமுக சார்பாக விஜய் பிரச்சார பீரங்கியாக தேர்தல் பிரச்சாரத்தில் விஜய் செயல்பட இருப்பதாகக் கூறப்படுகிறது. எனவே, தேர்தலுக்கு முன்கூட்டியே தனது தெறி படத்தை வெளியிடும் முயற்சிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டுள்ளாராம்.

அப்பாவுக்கு எம்.பி. பதவி...
திமுகவிற்கு ஆதரவாகச் செயல்பட தன் தரப்பில் இருந்து சில நிபந்தனைகளையும் விஜய் தரப்பு முன்வைத்துள்ளதாம். அதாவது திமுக சார்பில் சந்திரசேகருக்கு எம்.பி பதவி வழங்க வேண்டும் என்பது தான் அது.

ஆலோசனை...
இது குறித்து திமுக மேலிடம் ஆலோசித்து வருகிறதாம். தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கதவுகளையும் திறந்து வைத்துள்ள திமுக, விஜயை இழக்க சம்மதிக்காது என்பது தான் அரசியல் நிபுணர்களின் கருத்து.

தேமுதிக...
விஜய் மட்டுமின்றி விஜயகாந்தின் தேமுதிகவையும் தங்களது கூட்டணிக்குள் கொண்டு வரும் திட்டமும் திமுகவிடம் இருக்கிறது. இதில் எது கைகூடும், இல்லை இரண்டுமே கைகூடுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
மேலும் வாசிக்க…

சேதத்தை பார்வையிட்ட விஜயகாந்த் திடீர் ஆவேசம் கை ஓங்கியதால் பரபரப்பு..!!

2:11 AM |
திருவள்ளூரில் வெள்ளம் பாதிக்கப்பட்ட இடங்களை விஜயகாந்த் நேற்று பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார். அப்போது வெள்ளப் பகுதிகளை பார்வையிடச் சென்ற போது பொதுமக்கள் அவரை கூட்டமாக நெருங்க முயன்றுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த விஜயகாந்த், நாக்கை துருத்தி கையை ஆவேசமாக ஓங்கியபடி பொதுமக்களை அடிக்கப் பாய்ந்தார்





மேலும் வாசிக்க…
2015 Thediko.com