ராதிகா நேற்று எஸ்.ஏ. சந்திரசேகர் நடித்துள்ள நையப்புடை டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்களின் நிறைய படத்தில் நான் நடித்திருக்கிறேன். சார் ரொம்ப கோபக்காரர், உதவியாளர்கள் படக்குழுவினர் என அவர்கள் மேல் உள்ள உரிமையார் பலரை அவர் அடித்திருக்கிறார்.
விஜயகாந்த் பலரை அடிக்கிறார் என்றால் அதற்கு காரணம் எஸ்.ஏ.சந்திரசேகர். இருவரும் நிறைய படங்கள் ஒன்றாக சேர்ந்து பணியாற்றியிருக்கிறார்கள்.
எஸ்.ஏ.சந்திரசேகரிடம் தான் அடிக்க கற்றுக் கொண்டிருக்கிறார். விஜயகாந்த் ஒருவரை அடித்தார் என்று கேள்விப்படும் போதெல்லாம், எஸ்.ஏ.சந்திரசேகர் சார் தான் என் நினைவுக்கு வருவார் என்றார்.