ஒரு குட்டி பிளாஷ்பேக் முதல் முதலில் நடிகர் சங்கம் பெரும் கடனை அடைந்த போது அன்றைய தலைவர் விஜயகாந்த் அவர்களிடம் அஜித் சொன்ன வார்த்தைகள் இதோ…,
அன்றைய நடிகர் சங்கத் தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட நிர்வாகிகள் எவ்வளவோ முயன்றும்கூட அஜீத் வர மறுத்துவிட்டார். இந்த நிகழ்ச்சிக்கு வருமாறு அவரை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் அஜீத்தே நடிகர் சங்க அலுவலகத்துக்கு வந்தார்.
நேராக விஜயகாந்தைப் பார்த்து, ‘நடிகர் சங்கத்தின் கடனை அடைக்க ஏன் மக்களிடம் வசூலிக்க வேண்டும்? நாடு விட்டு நாடு போய் அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிறார்கள். அவர்களிடம் போய் நாம் பணம் கேட்கக் கூடாது. அதைவிட நடிகர்களாகிய நாமே அந்தக் கடனை அடைத்துவிடலாம். இதோ என் பங்களிப்பு ரூ 10 லட்சம். அதற்கான செக்கை இப்போதே தருகிறேன். இதேபோல மற்ற நடிகர் நடிகைகளிடம் அவரவர் சக்திக்கு தகுந்தபடி வசூலிக்கலாம். கடனை அடைக்க தேவையான நிதி தானாகக் கிடைத்துவிடப் போகிறது,” என்று கூறினார்
செக்கைக் கொடுத்துவிட்டுப் போனாராம். இதை விஜயகாந்த் ஏற்கவில்லை. அந்த செக்கையும் பயன்படுத்தவில்லை. திட்டமிட்டபடி கலைநிகழ்ச்சி நடத்தி, சிங்கப்பூர்வாசிகளிடம் நல்ல வசூலும் பார்த்தார்கள்.
இப்போது நட்சத்திர கிரிக்கெட் நடத்தி, தமிழகம் முழுக்க வசூல் வேட்டை நடத்த நடிகர் சங்கம் தயாராகி வரும் சூழலில், இந்த ப்ளாஷ்பேக்தான் நினைவுக்கு வருகிறது!
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
நடிகர் சங்கம்
,
நட்சத்திர கிரிக்கெட்
,
விஜயகாந்த்