பிரதியுஷாவின் மரணத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நடிகர் ராகுல், பெண்ணொருவர் மீது வல்லுறவு

2:19 AM |
மும்பையை சேர்ந்த டி.வி. நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கில் அவரது காதலனும், நடிகருமான ராகுல் சிங்குக்கு எதிராக நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் மும்பை உயர்நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்று வெளியில் இருக்கிறார்.

இந்தநிலையில், ஓஷிவாராவில் உள்ள ஒரு உணவகத்தில் 21 வயது நடிகை ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக நடிகர் ராகுல்சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ராகுல் சிங் மீது புகார் கொடுத்துள்ள நடிகை சம்பவத்தன்று தனது ஆண் நண்பர் உடன் உணவகத்திற்கு சென்றிருக்கிறார்.

அப்போது ராகுல் சிங் தனது தோழி ஒருவருடன் அங்கு இருந்தார்.ராகுல் சிங்கிற்கும், மானபங்கம் செய்யப்பட்ட நடிகையின் ஆண் நண்பருக்கும் இடையே ஏற்கனவே பிரச்சினை இருந்து உள்ளது. உணவகத்தில் அந்த நபரை பார்த்ததும் ராகுல்சிங் அவரிடம் சென்று போதையில் தகராறு செய்து இருக்கிறார். இதை தட்டிக்கேட்ட போது அவர், நடிகையை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அம்போலி பொலிஸார் ராகுல் சிங் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

படத்தை ப்ரிவியூ பார்த்த தயாரிப்பாளர் தற்கொலை: அதிர்ச்சியில் திரையுலகம்..!!

10:13 PM |
சமீபகாலமாக திரையுலகத்தினரின் தற்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

சாய்பிரசாந்த், பிரதியுஷா என பல சின்னத்திரை நட்சத்திரங்களின் தற்கொலையை தொடர்ந்து தற்போது மலையாள தயாரிப்பாளர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

இந்த செய்தி மலையாள திரையுலகத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் தற்போது அவருடே ராவுகள் (Avarude Raavukal) என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராகியுள்ளார். இப்படத்தில் உன்னி முகுந்தன், ஆசிப் அலி, ஹனி ரோஸ் ஆகியோர் நடிக்க ஷானில் முகமது இயக்கியுள்ளார்.

இப்படத்தின் ப்ரிவியூ பார்த்த அஜய் பாக்ஸ்ஆபிசில் வெற்றி பெறுமா என்று கலக்கத்தில் இருந்துள்ளார். 4 கோடி ரூபாய்க்கு மேல் இப்படத்தில் முதலீடு செய்துள்ளதால் கவலையை தனது பெற்றோரிடம் கூறி புலம்பியுள்ளார். இந்நிலையில் திடீரென நேற்று தற்கொலை செய்துள்ளார்.இவர் இதற்கு முன் பல மலையாள படங்களில் சின்ன வேடங்களில் தோன்றி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

தற்கொலை செய்து கொண்ட நடிகை கர்ப்பம் - அதிர்ச்சி தகவல் அம்பலம்..!!

12:17 AM |
மும்பையை சேர்ந்த பிரபல டி.வி. நடிகை பிரதியுஷா கடந்த 1-ந் திகதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரும், அவரது காதலன் ராகுல் சிங்கும் தனிமையில் வசித்து வந்த நிலையில், திடீரென அவர் இந்த முடிவை தேடிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும், ராகுல்சிங் கொடுத்த சித்ரவதை காரணமாக தான் பிரதியுஷா தற்கொலை செய்து கொண்டதாக அவரது தாயார் போலீசில் புகார் கொடுத்தார். இதனிடையே, இந்த வழக்கில் தன்னை போலீசார் கைது செய்யாமல் இருப்பதற்காக மும்பை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, ராகுல் சிங் முன்ஜாமீன் பெற்றார். அவரது முன்ஜாமீன் மேலும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், தற்கொலை செய்து கொண்ட 24 வயது டி.வி. நடிகை பிரதியுஷா, கர்ப்பமாக இருந்த தகவல் வெளியாகி பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருப்பையில் மேற்கொண்ட சோதனையில் இந்த தகவல் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், தற்கொலை செய்துகொள்வதற்கு சில நாட்களுக்கு முன்பு தான் பிரதியுஷா தன்னுடைய வயிற்றில் வளர்ந்த கருவை கலைத்திருக்கிறார். இந்த தகவலை ஜே.ஜே. மருத்துவமனை டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே, பிரதியுஷா தற்கொலை வழக்கில் மறைந்து கிடக்கும் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் முன்னர், அவர் கர்ப்பமாக இருந்த தகவல் வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் வாசிக்க…

நடிகை பிரதியுஷாவின் காதலன் தற்கொலை மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது..!!

2:13 AM |
மும்பையை சேர்ந்த டி.வி நடிகை பிரதியுஷா(வயது24). இந்தி தொடர்களில் நடித்து பிரபலமான இவர் கடந்த 1-ந் தேதி மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காதலன் ராகுலுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினார்கள்.

சென்ற 3-ந் தேதி போலீசார் விசாரித்து கொண்டிருந்த போது, ராகுலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இதற்கிடையே, பிரதியுஷாவின் தாய் சோமா பானர்ஜி கொடுத்த புகாரின் பேரில் பங்கூர் போலீசார் ராகுல் சிங் மீது பிரதியுஷாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ராகுல்சிங்கை போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று 2 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள்.

அதன்பின்னர் ஆஸ்பத்திரிக்கு வந்த அவர் திடீரென ஆஸ்பத்திரி குளியலறை கதவை பூட்டிக் கொண்டார். அதன்பின்னர் அவர் வெகுநேரமாக வெளியே வரவில்லை. இதுபற்றி அவரது உறவினர்கள் டாக்டர்களிடம் தெரிவித்தனர். அவர்கள் குளியலறை கதவை தட்டி வெளியே வரும்படி அழைத்தனர்.

அப்போது அவர் குளியலறை வழியாக கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறினார். இதை கேட்டு டாக்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அங்கு பரபரப்பும் ஏற்பட்டது. மேலும் எந்த வித விபரீத முடிவும் எடுத்துவிடாதபடிக்கு அவருக்கு வெளியே இருந்தபடியே ஆலோசனை வழங்கி சமாதானம் செய்தனர். இதன்பின்னர் அவர் கதவை திறந்து வெளியே வந்தார்.

பின்னர் அவருக்கு டாக்டர்கள் உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கி நேற்று முன்தினம் அவரை ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் செய்தனர்.
மேலும் வாசிக்க…

தற்கொலை செய்த நடிகை பிரதியுஷா கர்ப்பமாக இருந்தார்..!!

12:35 AM |
தற்கொலை செய்து கொண்ட இந்தி சின்னத்திரை நடிகை பிரதியுஷா பானர்ஜி கர்ப்பமாக இருந்தார் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷாவின் வழக்கை பாங்கூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரதியுஷாவின் பிரேதப் பரிசோதனையில் அவரது கருப்பையில் தடித்த வெள்ளைநிற திரவம் இருந்தது தெரியவந்தது. அதனால் அவர் கர்ப்பமாக இருந்தார் என கருதப்படுகிறது. அவரது திசு பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் எதையும் உறுதி செய்ய முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்த நடிகை பிரதியுஷா பயன்படக்கூடிய எந்த தடயத்தையும் விட்டு செல்லவில்லை. அதனால் விசாரணையை தீவிரப்படுத்த முடியவில்லை என பாங்கூர் நகர் போலீசார் தெரிவித்தனர்.

ஏற்கனவே முயற்சி?: பிரேத பரிசோதனை மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிரதியுஷாவின் இடது கை மணிக்கட்டில் பிளேடால் வெட்டிய தழும்பு இருந்தது’’ என்றனர்.பிரதியுஷாவின் மானேஜர் பிரகாஷ் ஜாஜூ கூறுகையில், ‘‘குடும்ப பிரச்னை காரணமாக ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.

ஆனால், சரியான நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்’’ என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதியுஷாவின் காதலர் ராகுலிடம் போலீசார் 2வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். அப்போது ராகுலுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
மேலும் வாசிக்க…

பிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சி! அதிர்ச்சி தகவல்..!!

10:27 PM |
இளையதளபதி விஜய்யோடு 'தமிழன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இப்போது பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிவருபவர் பிரியங்கா சோப்ரா.

அவர் 3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

2002ல் அவரின் காதலர் அசீம் மெர்சண்ட்டின் தாயார் இறந்த பிறகு பிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சி செய்ததாக, அவரின் அப்போதைய மேனேஜர் பிரகாஷ் ஜாஜு தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

"அபார்ட்மெண்ட்டிலிருந்து குதிக்க இருந்த அவரை நான் ஒரு முறை காப்பாற்றியிருக்கிறேன். நான் அப்போது அங்கு செல்லவில்லை என்றால் இப்போது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்" என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

நேற்றுதான் டிவி சீரியல் நடிகை பிரதியுஷா தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிரகாஷ் ஜாஜு இந்த தகவலை கூறியுள்ளார். இப்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் பிரியங்கா இது பற்றி இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com