இளையதளபதி விஜய்யோடு 'தமிழன்' படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி இப்போது பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை கலக்கிவருபவர் பிரியங்கா சோப்ரா.
அவர் 3 முறை தற்கொலை முயற்சி செய்துள்ளதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
2002ல் அவரின் காதலர் அசீம் மெர்சண்ட்டின் தாயார் இறந்த பிறகு பிரியங்கா சோப்ரா தற்கொலை முயற்சி செய்ததாக, அவரின் அப்போதைய மேனேஜர் பிரகாஷ் ஜாஜு தெரிவித்துள்ளார். இது அவரது ரசிகர்கள் அனைவருக்கும் பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
"அபார்ட்மெண்ட்டிலிருந்து குதிக்க இருந்த அவரை நான் ஒரு முறை காப்பாற்றியிருக்கிறேன். நான் அப்போது அங்கு செல்லவில்லை என்றால் இப்போது அவர் உயிருடன் இருந்திருக்க மாட்டார்" என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
நேற்றுதான் டிவி சீரியல் நடிகை பிரதியுஷா தற்கொலை செய்துகொண்ட நிலையில் பிரகாஷ் ஜாஜு இந்த தகவலை கூறியுள்ளார். இப்போது ஹாலிவுட் படத்தில் நடித்து வரும் பிரியங்கா இது பற்றி இன்னும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.
Tags:
Cinema
,
சினிமா
,
தமிழன்
,
பிரகாஷ் ஜாஜு
,
பிரதியுஷா
,
பிரியங்கா சோப்ரா
,
விஜய்