தற்கொலை செய்து கொண்ட இந்தி சின்னத்திரை நடிகை பிரதியுஷா பானர்ஜி கர்ப்பமாக இருந்தார் என பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.மும்பையில் கடந்த வெள்ளிக்கிழமை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட நடிகை பிரதியுஷாவின் வழக்கை பாங்கூர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பிரதியுஷாவின் பிரேதப் பரிசோதனையில் அவரது கருப்பையில் தடித்த வெள்ளைநிற திரவம் இருந்தது தெரியவந்தது. அதனால் அவர் கர்ப்பமாக இருந்தார் என கருதப்படுகிறது. அவரது திசு பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் எதையும் உறுதி செய்ய முடியும் என மருத்துவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்த நடிகை பிரதியுஷா பயன்படக்கூடிய எந்த தடயத்தையும் விட்டு செல்லவில்லை. அதனால் விசாரணையை தீவிரப்படுத்த முடியவில்லை என பாங்கூர் நகர் போலீசார் தெரிவித்தனர்.
ஏற்கனவே முயற்சி?: பிரேத பரிசோதனை மைய அதிகாரிகள் கூறுகையில், ‘‘பிரதியுஷாவின் இடது கை மணிக்கட்டில் பிளேடால் வெட்டிய தழும்பு இருந்தது’’ என்றனர்.பிரதியுஷாவின் மானேஜர் பிரகாஷ் ஜாஜூ கூறுகையில், ‘‘குடும்ப பிரச்னை காரணமாக ஏற்கனவே 3 முறை தற்கொலைக்கு முயன்றார்.
ஆனால், சரியான நேரத்தில் அவர் காப்பாற்றப்பட்டார்’’ என்று தெரிவித்துள்ளார். இதனிடையே, பிரதியுஷாவின் காதலர் ராகுலிடம் போலீசார் 2வது நாளாக நேற்று விசாரணை நடத்தினர். அப்போது ராகுலுக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டார்.
Tags:
Cinema
,
சினிமா
,
சின்னத்திரை நடிகை
,
பிரதியுஷா
,
ராகுல்