இணையத்தில் கசிந்த தெறி படத்தின் 3 நிமிட க்ளைமாக்ஸ் காட்சிகள்..!!

4:52 AM |
இன்றைய சூழ்நிலையில் ஒரு படத்தை தயாரிப்பது எளிமையான காரியம் ஆகிவிட்டது. ஆனால், அதனை திரைக்கு கொண்டுவருவது சாதாரண விடயம் அல்ல. வெளியிடுவதற்க்குள் பல பிரச்சனைகளை சந்திக்க வேண்டிய சூழழ்.

இதில், புதிதாக விஸ்வரூபம் எடுத்திருக்கும் விஷயம் தான் படம் வெளியாகும் முன்பே, படத்தின் முக்கிய கட்சிகளை இணையத்தில் கசியவிடும் கலாச்சாரம்.

இந்த வகையில் இப்போது இணைய கிருமிகளிடம் சிக்கியிருப்பது தெறி படம். நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் க்ளைமாக்ஸ் சண்டை காட்சிகள் இணையத்தில் வெளியாகியிருப்பதாக சமூக வலைதளங்களில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதனையடுத்து, நான் இணையத்தில் தேடியவரை அப்படிப்பட்ட வீடியோ வெளியாகாவில்லை என தெரிகிறது.

இருந்தாலும், யூட்யூபில் அந்த வீடியோ இருந்ததாகவும் சில நிமிடங்களில் பத்தாயிரத்துக்கு மேற்பட்டோர் பார்த்ததாகவும் ஆனால், யூட்யூப் தளத்திலிருந்து உடனடியாக நீக்கப்பட்டு விட்டது எனவும் தகவல்கள் கிடைகின்றன.

தெறி படம் வெளியாக இன்னும் சொற்ப தினங்களே உள்ள நிலையில் இப்படியான வதந்திகள் படக்குழுவினரையும், ரசிகர்களையும் அதிர்ச்சியடைய செய்யும் என்பது மறுக்கமுடியாத உண்மை.
மேலும் வாசிக்க…

தெறியில் மாஸ்ஸான சீனை வெளியிட்ட பிரபலம் தேர்தல் நேரத்தில் இப்படியா தளபதி செய்வார்!!

4:25 AM |
விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற இன்னும் ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில் இளையதளபதி விஜய் திடீரென ஒரு அமைச்சருடன் மோதுகிறாராம். ஆனால் அந்த அமைச்சர் 'தெறி' படத்தின் கேரக்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆம் 'தெறி' படத்தின் வில்லனாக நடிக்கும் இயக்குனர் மகேந்திரனுக்கு இந்த படத்தில் அமைச்சர் கேரக்டராம். அமைச்சர் மகேந்திரனுக்கும் போலீஸ் அதிகாரி விஜய்க்கும் இடையே நடைபெறும் மோதல்தான் படத்தின் மெயின் கதை என்று கூறப்படுகிறது.

ஒரு காட்சியில் அமைச்சராக இருக்கும் மகேந்திரன் சிகரெட்டை பற்ற வைத்து புகையை விஜய் முகத்தின் மீது ஊதும் காட்சி உள்ளதாம். விஜய்யும் அட்லியும் நிறைய புகையை ஊதுங்கள் என்று கூறியபோதிலும் மகேந்திரன் தயங்கினாராம். அதற்கு காரணம் கேட்டபோது, 'விஜய் என்ன பிரமாதமான எக்ஸ்பிரஷன் காமிச்சிட்டு இருக்கார்.

ஒருவேளை நான் ஊதும் புகை அவரது எக்ஸ்பிரஷனை மறைச்சிடுச்சுன்னா ஆடியன்ஸுக்குத் தெரியாமல் போயிடுமே என்ற பயம். என்ஜாய் பண்ண முடியாதே என்ற கவலையால் நான் அதிக புகையை ஊதவில்லை' என்று மகேந்திரன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

தெறி யில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரவிருக்கும் விஜய்..!!

6:50 AM |
படத்தில் தனது மலையாள ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி தரவிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் ஒரு மலையாளியாக வருவதுடன், மலையாளமும் பேசப் போகிறாராம்.

அட்லி இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு, இயக்குநர் மகேந்திரன், ராதிகா போன்றோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தெறி. இந்தப் படத்துக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

தெறி படத்தில் விஜய் கதாபாத்திரத்தின் பெயர் ஜோசப் குருவிலா! இந்தப் பெயரை அவர் உச்சரிப்பது ட்ரைலரிலும் இடம்பெற்றுள்ளது. கேரளாவில் பெரும்பகுதி காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து இயக்குநர் அட்லி கூறுகையில், “படத்தின் 40% காட்சிகள் கேரளாவில் நடைபெறுகின்றன. டிரெயிலரில் பார்த்தபடி ஜோசப் குருவிலா என்கிற கதாபாத்திரத்தில் நடிக்கும் விஜய் அங்கு வசிப்பதாக காட்சிகள் உள்ளன.

அதேநேரம் விஜய் மலையாளத்தில் பேசுவாரா என்பது சர்ப்ரைஸ்,” என்றார். படத்தில் நிறைய மலையாள வசனங்கள் இருப்பதால், நிச்சயம் விஜய் மலையாளம் பேசி நடித்திருப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

கேரளாவில் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம். அவர்களுக்கு இந்த தெறி நிச்சயம் இனிய அதிர்ச்சியைத் தரும் என்பது உறுதி.
மேலும் வாசிக்க…

எஸ்.தாணு தயாரிப்பில் விஜய் நடிக்கும் 59வது படத்தின் பெயர், ’தெறி’

7:54 AM |
விஜய் நடிக்கும் 59-வது படத்துக்கு, 'தெறி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.

விஜய் நடித்த 58-வது படமான 'புலி,' கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் அவர் ஜோடிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள். சிம்பு தேவன் டைரக்டு செய்திருந்தார். பி.டி.செல்வகுமார், சிபு தமீம் ஆகிய இரண்டு பேரும் தயாரித்து இருந்தார்கள். இதையடுத்து, விஜய் நடிக்கும் 59-வது படம் தொடங்கியது. இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்க, அட்லி டைரக்டு செய்து வருகிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படாமல், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.

கார்த்திகை தீபமான நேற்று இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு, 'தெறி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், சுனைனா ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நடிகை மீனாவின் மகள் நைனிகா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறாள்.படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவாவில் நடைபெற்றது. பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.

தெறி என்றால் தெறித்தல் என்று அர்த்தம். 'தெறிச்சு ஓடணும்டா' என்று பேச்சு வழக்கில் பயன்படுத்துவார்கள்.

அஜீத் தனது வேதாளம் படத்தில் 'தெறிக்க விடலாமா' என வசனம் பேசி இருப்பார். இதை வைத்து அஜீத்தின் பட விளம்பரங்களில் 'தெறி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தனர்.இப்போது விஜய் தன் படத்துக்கு தெறி என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பும், படத்தின் டைட்டில் வடிவமைப்பும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com