விஜய் நடிக்கும் 59-வது படத்துக்கு, 'தெறி' என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எஸ்.தாணு தயாரித்து வருகிறார்.
விஜய் நடித்த 58-வது படமான 'புலி,' கடந்த அக்டோபர் மாதம் 1-ந் தேதி திரைக்கு வந்தது. இந்த படத்தில் அவர் ஜோடிகளாக சுருதிஹாசன், ஹன்சிகா ஆகிய இருவரும் நடித்து இருந்தார்கள். சிம்பு தேவன் டைரக்டு செய்திருந்தார். பி.டி.செல்வகுமார், சிபு தமீம் ஆகிய இரண்டு பேரும் தயாரித்து இருந்தார்கள். இதையடுத்து, விஜய் நடிக்கும் 59-வது படம் தொடங்கியது. இந்த படத்தை எஸ்.தாணு தயாரிக்க, அட்லி டைரக்டு செய்து வருகிறார். படத்துக்கு பெயர் சூட்டப்படாமல், படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது.
கார்த்திகை தீபமான நேற்று இந்த படத்தின் பெயர் அறிவிக்கப்பட்டது. படத்துக்கு, 'தெறி' என்று பெயர் சூட்டியிருக்கிறார்கள். இதில் விஜய்யுடன் சமந்தா, எமிஜாக்சன், சுனைனா ஆகிய 3 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். நடிகை மீனாவின் மகள் நைனிகா, குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகிறாள்.படப்பிடிப்பு சென்னை மற்றும் கோவாவில் நடைபெற்றது. பெரும்பகுதி காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன.
தெறி என்றால் தெறித்தல் என்று அர்த்தம். 'தெறிச்சு ஓடணும்டா' என்று பேச்சு வழக்கில் பயன்படுத்துவார்கள்.
அஜீத் தனது வேதாளம் படத்தில் 'தெறிக்க விடலாமா' என வசனம் பேசி இருப்பார். இதை வைத்து அஜீத்தின் பட விளம்பரங்களில் 'தெறி' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தனர்.இப்போது விஜய் தன் படத்துக்கு தெறி என்று தலைப்பிட்டுள்ளார். தலைப்பும், படத்தின் டைட்டில் வடிவமைப்பும் ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்துள்ளது.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
தெறி திரை விமர்சனம்
,
தெறி விமர்சனம்