பெங்களூரில் தீபாவளி கொண்டாட்டம்…!! மூன்றே பேரு..! அந்த மூன்றாவது ஆளு யாரு…!! கில்லி..ஒல்லி..பெல்லி

1:34 AM |
ஒரு கொடியில் இருமலர்கள். கூடவே கில்லிபாய்..! பெங்களூரில் தீபாவளிக் கொண்டாட்டம்..! முடிவே செய்து விட்டார்கள்.

அமலா,விமலா..கமலா போன்றவர்களை விட..தங்கச்சி ஓகே.. பாவம் ரொம்ப ஆசை வச்சிடுச்சி..! அது இனிமே எங்கே போவும்..! கூடவே இருக்கட்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள்.

பிடிக்குதோ பிடிக்கலையோ வேறு வழி இல்லை என்று குடும்பமும் முடிவிற்கு வந்துவிட்டதாம்.

கடந்த ஞாயிறு வெளி வந்த புலனாய்வு பத்திரிகை ஒன்று தங்கைக்கு அத்தான் மீது உள்ள காதலையும், அந்த காதலிக்கு அத்தான் செய்யும் உபசரிப்பையும் விலாவாரியாகவே எழுதி இருந்தது..!

முதன் முதலாக மூவரும் கலந்து கொள்ளும் தீபாவளிக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். பெங்களூரில் உறவினர் வீட்டிலும் அன்று ஸ்டார் ஹோட்டலில் கெட் டூ கெதர் ஆடல் பாடலும் நடைபெறுமாம்..!

புத்தாண்டு கொண்டாட்டம் அமெரிக்கா..! கண்கள் பனிக்க, இதயம் இனிக்க வாழ்க  மண மக்கள்..!!
மேலும் வாசிக்க…

தயாரிப்பாளரை திருமணம் செய்யும் பாவனா..!!

2:53 AM |
பிரபல மலையாள நடிகை பாவனா. இவர் ஏராளமான மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் திரைப் படங்களிலும் பாவனா நடித்துள்ளார்.

டைரக்டர் மிஷ்கின் டைரக்ஷனில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா தொடர்ந்து அஜித் ஜோடியாக ‘அசல்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் பிரபலமானார்.

தீபாவளி, வெயில், ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம் என்று தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்த பாவனா அதன்பிறகு மீண்டும் மலையாள பட உலகில் தஞ்சம் அடைந்தார். அங்கு சில படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் நடிகை பாவனா காதல் வலையில் சிக்கியுள்ளதாக திரை உலகில் கிசு கிசு கிளம்பியது. அதை பாவனா மறுத்துவந்தார். தற்போது பாவனா தனது காதல் பற்றி மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:–

நானும் கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2014–ம் ஆண்டே நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தொடர் படப்பிடிப்பு காரணமாக அப்போது திருமணம் செய்ய முடிய வில்லை.

எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்ய உறுதியாக உள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலன் பெயர் மற்றும் விவரங்களை இப்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கான காலம் வரும் போது அனைவருக்கும் அவரை பற்றிய விவரங்களை தெரிவிப்பேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் வாசிக்க…

தீபாவளிக்கு வெளியாகிறது விஜய்59

10:45 AM |
ராஜா ராணி புகழ் அட்லி இயக்கிவரும் ‘விஜய் 59′ படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற தீபாவளி நவம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது 70% முடிவடைந்துள்ளது. இதில் விஜய், சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாகியுள்ளது.

வரும் நவம்பர் முதல் விஜய்யுடன் எமி ஜாக்சன் பங்கேற்கும் ஒரு சில காட்சிகள் படமாகவுள்ளதாம். மேலும் இப்படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜனவரி முதல் வாரத்தில் முடிந்துவடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அதன்பின்னர் படம் சம்மர் ஸ்பெஷலாக திரைக்குவரும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com