பிரபல மலையாள நடிகை பாவனா. இவர் ஏராளமான மலையாள படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். மேலும் பல தமிழ் திரைப் படங்களிலும் பாவனா நடித்துள்ளார்.
டைரக்டர் மிஷ்கின் டைரக்ஷனில் ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான பாவனா தொடர்ந்து அஜித் ஜோடியாக ‘அசல்’ படத்தில் நடித்ததன் மூலம் தமிழிலும் பிரபலமானார்.
தீபாவளி, வெயில், ஜெயம் கொண்டான், ராமேஸ்வரம் என்று தமிழ் படங்களில் தொடர்ந்து நடித்த பாவனா அதன்பிறகு மீண்டும் மலையாள பட உலகில் தஞ்சம் அடைந்தார். அங்கு சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் நடிகை பாவனா காதல் வலையில் சிக்கியுள்ளதாக திரை உலகில் கிசு கிசு கிளம்பியது. அதை பாவனா மறுத்துவந்தார். தற்போது பாவனா தனது காதல் பற்றி மனம் திறந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:–
நானும் கன்னட சினிமா தயாரிப்பாளர் ஒருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருகிறோம். கடந்த 2014–ம் ஆண்டே நாங்கள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். ஆனால் தொடர் படப்பிடிப்பு காரணமாக அப்போது திருமணம் செய்ய முடிய வில்லை.
எனவே இப்போது நாங்கள் திருமணம் செய்ய உறுதியாக உள்ளோம். இந்த வருடம் கண்டிப்பாக எங்கள் திருமணம் நடைபெறும். எனது காதலன் பெயர் மற்றும் விவரங்களை இப்போது வெளியிட விரும்பவில்லை. அதற்கான காலம் வரும் போது அனைவருக்கும் அவரை பற்றிய விவரங்களை தெரிவிப்பேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Tags:
Cinema
,
சித்திரம் பேசுதடி
,
சினிமா
,
தீபாவளி
,
பாவனா
,
ராமேஸ்வரம்