சென்சரால் கத்தரிக்காமல் விட்ட ஜெயம்ரவி மற்றும் அஞ்சலி நடித்த காட்சி! வீடியோ

12:08 AM |
மேலும் வாசிக்க…

விஷால், கார்த்தியுடன் நடிக்கும் சூர்யா..!!

10:20 PM |
நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்காக நடிகர்கள் விஷால் மற்றும் கார்த்தி ஒரு படத்தில் இணைந்து நடிக்க திட்டமிட்டிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம்.

இந்நிலையில் தேவைப்பட்டால் இந்த படத்தில் நானும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க தயார் என நடிகர் சூர்யா சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதேபோல் ஜீவா, ஆர்யா, ஜெயம்ரவி ஆகியோரும் இதில் நடிக்க ஆரம்பம் முதலே ஆர்வம் காட்டி வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

என்னாது சூரியா? தனியா வரட்டும்! நம்மளோட சேர்க்கப் ….ப்டாது! வடிவேலு புல் ஸ்டாப்?

3:27 AM |
இப்போது வருகிற எந்த காமெடி நடிகர்களிடமும், “உங்களுக்கு யாரோட காமெடி பிடிக்கும்?”னு கேட்டுப் பாருங்களேன். கட்டாயம் கவுண்டமணியை சொல்வார்கள். காமெடியர்கள் மட்டுமல்ல, பிரபல ஹீரோக்களாகிவிட்ட சந்தானம், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி எல்லாருமே கவுண்டரை சந்தித்து ஒரு போட்டோ எடுத்து அதையே பொக்கிஷம் போல வைத்திருக்கிறார்கள். கட்…! அந்த கவுண்டருக்கு அடுத்த படியிலிருக்கிறார் வடிவேலு. இப்போதிருக்கும் எல்லா இளம் ஹீரோக்களுக்கும் வடிவேலு என்றால் கூட இஷ்டம்தான்.

சுராஜ் இயக்கிய படிக்காதவன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகியதிலிருந்துதான் வடிவேலுவுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆனதாம். அதற்கப்புறம் இவர் நடிக்க வேண்டிய வேடத்தில்தான் விவேக் நடித்தார். அந்த தவறை வெகு காலத்திற்கு பிறகு உணர்ந்த வடிவேலு, தற்போது தாமாகவே முன் வந்து சுராஜ் படத்தில் நடிக்கிறார். இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கத்தி சண்டை.

முன்பு போல எதையும் முகத்திலடித்து சொல்லாமல் சிரித்துக் கொண்டே ஒரு விஷயத்தை சொல்லிவிட்டாராம் வடிவேலு. இப்படத்தில் இன்னொரு காமெடியனாக சூரியும் நடிக்கிறார் என்ற தகவலை வடிவேலு காதுக்கு கொண்டு போனாராம் சுராஜ். அவரிடம், “அந்த தம்பி நல்லாத்தான் நடிக்கிறான். நடிக்கட்டும் நல்லா நடிக்கட்டும். ஆனா நம்ம போர்ஷனுக்குள்ள வந்துட வேண்டாம். எங்கயாவது நுழைச்சுக்குங்க. எங்கயாவது சிரிக்க வைங்க. நம்ம போர்ஷன் க்ளீனா இருக்கணும்” என்று கூறிவிட்டாராம்.

ஆக மொத்தம் கத்தி சண்டை படத்தில் வடிவேலு இருப்பார். சூரி இருப்பார். ஆனால் இரண்டு பேரும் தனித்தனியாக ஸ்கிரினில் தோன்றுவார்கள். சிரிப்பதும், சிரிக்காததும் உங்கள் பாடு!
மேலும் வாசிக்க…

சிபிராஜின் கன்னத்தில் ஓங்கி அறைந்த ஜீவா..!!

12:09 AM |
மார்க்கெட்டில் வேண்டுமானால் சிபிராஜின் லெவல் சின்னதாக இருக்கலாம். ஆனால் நட்பு வட்டாரத்தில் அவர் எல்லாருக்கும் ஸ்பெஷலானவர். ஆர்யா, ஜீவா, விஷால், ஜெயம்ரவி கூட்டணியில் சிபிராஜுக்கும் ஜித்தன் ரமேஷுக்கும் தனி நாற்காலி போட்டு அமர வைத்திருக்கிறது அந்த தோழர்ஸ் மனசு! இந்த நிலையில்தான் நட்புக்கு இலக்கணமாக இருந்த ஜீவாவும் சிபிராஜும் கைகலப்பில் இறங்கி கன்னத்தை பழுக்க வைத்துக் கொண்டார்களாம். இது குறித்த தகவல்கள் வருமாறு-

தமிழுக்கு எண் 1 ஐ அழுத்தவும் படத்தின் இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கி வரும் படம் ‘போக்கிரி ராஜா’. இதில் ஜீவாவுக்கும் ஹன்சிகாவுக்குமான காதலை புகுந்து கெடுக்கும் வாலிபரின் கேரக்டரில் நடித்திருக்கிறார் சிபிராஜ். இந்த கதையை அவர் ஜீவாவிடம் சொல்லி கால்ஷீட் வாங்கிய பின், சிபிராஜை சந்தித்து கதையை சொன்னாராம். ஆனால் அப்போது ஜீவாவின் கேரக்டரை பற்றி மூச்சு விடாமல் சிபிராஜின் சீன்களை மட்டும் சொல்லியிருக்கிறார். “எனக்கு இந்த சீன்கள் ஓ.கே. அவனுக்கு?” என்று கேட்டாராம் சிபிராஜ். அதற்கப்புறம் இவர் ஜீவாவின் ரோலை பற்றி விவரிக்க, உடனே ஜீவாவுக்கு போன் போட்டு, “மச்சி சூப்பர்டா” என்றாராம் சிபி.

அப்படியொரு நட்பிலிருந்த இருவருக்கும் நடுவில்தான் ஷுட்டிங் ஸ்பாட்டில் கைகலப்பு. கதைப்படி ஒரு பைட் சீன். சிபிராஜ் ஜீவாவை அடிக்க வேண்டும். அவர் அடித்து இவரை கீழே தள்ள, அதில் ஒரு சுரத்தும் இல்லையே என்று பீல் பண்ணினாராம் ராம்பிரகாஷ் ராயப்பா. இன்னும் நல்லா அடிங்க சிபி. நீங்க அடிக்கிற அடியில் அவர் நிஜமாகவே போய் தூர விழணும் என்று கேட்க, அதற்கப்புறம் தாமதிக்கவில்லை சிபி. ஓங்கி ஒரே எத்து. சுவர் ஓரமாக போய் விழுந்தாராம் ஜீவா. அதற்கப்புறம் சமாளித்து எழுந்து வந்தவர், வந்த வேகத்தில் சிபிராஜின் கன்னத்தில் பளாரென ஒரு அறை விட, யூனிட்டே திகைப்பில் ஆழ்ந்ததாம்.

சீன்ல இப்படியெல்லாம் இல்லையே என்று குழம்பிப் போன ராம்பிரகாஷ் ராயப்பா, இருவரையும் கவலையோடு பார்க்க, அன்று போடப்பட்டதாம் நட்புக்கு முழுக்கு. இருவரும் இன்று வரை பேசிக் கொள்வதில்லையாம். இந்த அறை நிஜமாகவே ஷுட்டிங் ஸ்பாட்டில் தேவையான பைட்டுக்காக விழுந்ததா? அல்லது ஷுட்டிங்குக்கு வெளியே நடந்த வேறு ஏதேனும் பிரச்சனைக்காக விழுந்ததா? அறை கொடுத்தவருக்கும் வாங்கியவருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம் அது!
மேலும் வாசிக்க…

தென்னிந்திய திரைவிழாவில் விருதுகளை குவிக்கப்போகும் தனி ஒருவன்..!!

11:07 PM |
இண்டர்நேஷனல் இந்தியன் பிலிம் அகாடமி இந்த ஆண்டு தென்னிந்திய திரைப்பட விழாவை பிரமாண்டமாக நடத்துகிறது. நாளை ஐதராபாத்தில் தொடங்கும் இந்த விழா இரண்டு நாட்கள் நடக்கிறது. இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த முன்னணி நடிகர் நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். நான்கு மொழிகளில் இருந்தும் சிறந்த படங்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட இருக்கிறது.

இந்த விழாவின் நடுவர்கள் விருதுக்கு வந்துள்ள படங்களை பார்த்து தேர்வு செய்துள்ளனர். திரைப்படவிழா வட்டார தகவல்களின்படி ஜெயம்ரவி, நயன்தாரா, அரவிந்த்சாமி நடிப்பில் மோகன்ராஜா இயக்கிய தனி ஒருவன் அதிக விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் பாகுபலி படம் அதிக விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

விழாவில் பிரபுதேவா, தேவிஸ்ரீ பிரசாத், பரத், சிவராஜ்குமார், ராம்சரண் தேஜா, ஜீவா, அகில் அக்னினேனி, தமன்னா, ஸ்ரேயா, டாப்ஸி, பிரியாமணி, ஆகியோர் நடனமாடுகிறார்கள். சாதனை கலைஞர்கள் கே.பாலச்சந்தர், எம்.எஸ்.விஸ்வநாதன், வாசுதேவன் நாயர், சித்தலிங்கையா கவுரவிக்கப்படுகிறார்கள்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com