விஷாலை ஓவர்டேக் செய்த சூரி..!!

11:48 PM |
விஷாலுடன் பாண்டியநாடு, பாயும்புலி, பூஜை, மருது ஆகிய படங்களைத் தொடர்ந்து கத்திச்சண்டை படத்திலும் காமெடியனாக நடித்துள்ளார் சூரி. இதில் கத்திச்சண்டை படத்தில் வடிவேலுவும் காமெடியனாக நடித்துள்ளார். என்றாலும், அவருக்காக சூரியை டம்மி பண்ணவில்லையாம். விஷால் படங்களில் பெரும்பாலும் சூரியின் காமெடி மேலோங்கி நிற்பது போன்று இந்த படத்திலும் குறைவில்லாமல் இடம்பெற்றிருக்கிறதாம்.

மேலும், கத்திச்சண்டையில் பல காமெடி காட்சிகளில் ஆங்கில வார்த்தைகளை கலந்து பேசியிருக்கிறாராம் சூரி. ஆனால் தப்பு தப்பாக வார்த்தைகளை பேசி மாட்டிக் கொள்வாராம். அந்த காட்சிகள் தியேட்டர்களில் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்குமாம். மேலும், காமெடி காட்சிகளில் விஷாலும் சூரியுடன் டிராவல் செய்தபோதும், அவரை பேசவே விடாமல் தான் மட்டுமே அதிகமாக ஸ்கோர் செய்துள்ளாராம் சூரி.

இந்த தகவலை தெரிவித்துள்ள விஷால், இதுவரை எனது படங்களில் செய்த காமெடியை விட இந்த கத்திச்சண்டை படத்தில் காமெடி காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார் சூரி. அவரது நடிப்பு பிரமாதமாக இருந்ததால் அவருக்கு விட் டுக்கொடுத்து நடித்தேன். அதனால், காமெடி காட்சிகளில் சூரி இஷ்டத்துக்கு விளையாடியிருக்கிறார் என்கிறார்.
மேலும் வாசிக்க…

ஒரு கோடிக்கு ஆசைப்பட்டு சூரி பட்ட அவமானம் தெரியுமா? பாருங்கள்

1:05 AM |
மேலும் வாசிக்க…

சூரிக்கு வந்த திடீர் ஆசை..!!

11:37 PM |
பிரபல நடிகர்கள், பெண் வேடத்தில் நடிக்கும், 'டிரென்ட்' மீண்டும் உருவாகியுள்ளது. ரெமோ படத்தில், சிவகார்த்திகேயன், நர்ஸ் வேடத்தில் நடிப்பது, அனைவரும் அறிந்ததே.

நகைச்சுவை நடிகர் சூரிக்கும் இப்போது அந்த ஆசை உருவாகி விட்டது. விஷால், தமன்னா நடிக்கும் கத்திச் சண்டை படத்தில், சூரியும், சில காட்சிகளில் பெண் வேடமிட்டு கலக்கியுள்ளாராம். சமீபகாலமாக சரிவில் இருக்கும் தன் மார்க்கெட், இந்த படத்துக்கு பின், மீண்டும் உச்சத்துக்கு வரும் என நம்புகிறார் சூரி.

'காமெடி நடிகர்களின் பட்டியலில், தற்போது நான்தான் நம்பர் ஒன். ஆனால், என்னைப் பற்றி சிலர், தவறான தகவல்களை பரப்புகின்றனர்' என்கிறாராம் சூரி.
மேலும் வாசிக்க…

சூரிக்கு இப்போ ரோபோ சங்கர் போட்டியா??

11:37 PM |
ரெண்டு, குசேலன், தொட்டால் பூ மலரும், ஜில்லுனு ஒரு காதல், தில்லாலங்கடி, பிப்ரவரி 14, லிங்கா, சச்சின், கண்ணும் கண்ணும், தீக்குச்சி, வியாபாரி, இங்கிலீஸ்காரன் ஆகிய படங்களில் வடிவேலும், சந்தானமும் இணைந்து நடித்துள்ளனர். காமெடியனைத் தவிர்த்து வடிவேலு ஹீரோவாக நடிக்க சந்தானத்துக்கு காமெடி மார்க்கெட் எகிறியது.

கொஞ்ச காலம் சந்தானத்தை நம்பியிருந்த ஹீரோக்கள் இப்போ சூரியை நம்பத் தொடங்கிவிட்டனர். ஏனென்றால், சந்தானம் இப்போ ஹீரோவாக நடிக்க தொடங்கிவிட்டார். ஹீரோக்களுக்கு இணையாக வளர்ந்து வரும் சூரிக்கு இப்போ வாய்ப்பு மழை கொட்டோ கொட்டுனு கொட்டுது.

இப்படியிருந்தபோது எழில் இயக்கத்தில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் ரோபோ சங்கரின் காமெடி பெரிய அளவில் ஒர்க் அவுட்டானது. அவரது காமெடிக்காகவே அந்த படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டர்களுக்கு விசிட் அடித்தனர்.

இதன் விளைவு, இப்போது கோலிவுட்டின் டாப் காமெடியன் லிஸ்டில் ரோபோ சங்கரின் பெயரும் இடம்பிடித்து விட்டது. சூரி பிசியாக இருந்தால் மட்டும் மற்ற காமெடியன்களை நாடிய இயக்குனர்கள், இப்போது டேரக்டாக ரோபோ சங்கரிடம் கால்ஷீட் கேட்க தொடங்கிவிட்டனர். இதனால் சந்தானத்துக்கு போட்டியாக இருந்த சூரிக்கு இப்போ ரோபோ சங்கர் போட்டியாக வந்துவிட்டார்
மேலும் வாசிக்க…

இராஜபாளையம் பெண்களின் அழகை ரசித்தேன். விஷால்..!!

11:10 PM |
விஷால், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் வெளியாகவுள்ள 'மருது' திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்புகள் இராஜபாளையத்தில்தான் நடைபெற்றது. இயக்குனர் முத்தையாவின் சொந்த ஊர் என்பதால் அந்த ஊரின் இண்டு இடுக்கெல்லாம் அவருக்கு அத்துபடி, என்றும், அந்த ஊரையே அவர் ஒரு பிலிம் சிட்டியாக மாற்றிவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் ராஜபாளையம் என்றாலே நாய்களுக்குப் புகழ்பெற்றது என்று கூறுவார்கள். ஆனால் அந்த ஊர் அழகான பெண்களுக்கும் பெயர் பெற்றது. அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.

இந்த படத்தில் ராதாரவி, சூரி ஆகிய இருவருமே முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதாரவியுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கவும் இருந்ததில்லை. நடிகர் சங்க தேர்தலை அவர் ஒரு கோணத்தில் பார்த்தார். நான் ஒரு கோணத்தில் பார்த்தேன். அவ்வளவுதான்

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பேய் என்றும் ராட்சசன் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவர் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படம் எனக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் திருப்தியான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

என்னாது சூரியா? தனியா வரட்டும்! நம்மளோட சேர்க்கப் ….ப்டாது! வடிவேலு புல் ஸ்டாப்?

3:27 AM |
இப்போது வருகிற எந்த காமெடி நடிகர்களிடமும், “உங்களுக்கு யாரோட காமெடி பிடிக்கும்?”னு கேட்டுப் பாருங்களேன். கட்டாயம் கவுண்டமணியை சொல்வார்கள். காமெடியர்கள் மட்டுமல்ல, பிரபல ஹீரோக்களாகிவிட்ட சந்தானம், சிவகார்த்திகேயன், ஜெயம்ரவி எல்லாருமே கவுண்டரை சந்தித்து ஒரு போட்டோ எடுத்து அதையே பொக்கிஷம் போல வைத்திருக்கிறார்கள். கட்…! அந்த கவுண்டருக்கு அடுத்த படியிலிருக்கிறார் வடிவேலு. இப்போதிருக்கும் எல்லா இளம் ஹீரோக்களுக்கும் வடிவேலு என்றால் கூட இஷ்டம்தான்.

சுராஜ் இயக்கிய படிக்காதவன் படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகியதிலிருந்துதான் வடிவேலுவுக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆனதாம். அதற்கப்புறம் இவர் நடிக்க வேண்டிய வேடத்தில்தான் விவேக் நடித்தார். அந்த தவறை வெகு காலத்திற்கு பிறகு உணர்ந்த வடிவேலு, தற்போது தாமாகவே முன் வந்து சுராஜ் படத்தில் நடிக்கிறார். இதில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். படத்தின் பெயர் கத்தி சண்டை.

முன்பு போல எதையும் முகத்திலடித்து சொல்லாமல் சிரித்துக் கொண்டே ஒரு விஷயத்தை சொல்லிவிட்டாராம் வடிவேலு. இப்படத்தில் இன்னொரு காமெடியனாக சூரியும் நடிக்கிறார் என்ற தகவலை வடிவேலு காதுக்கு கொண்டு போனாராம் சுராஜ். அவரிடம், “அந்த தம்பி நல்லாத்தான் நடிக்கிறான். நடிக்கட்டும் நல்லா நடிக்கட்டும். ஆனா நம்ம போர்ஷனுக்குள்ள வந்துட வேண்டாம். எங்கயாவது நுழைச்சுக்குங்க. எங்கயாவது சிரிக்க வைங்க. நம்ம போர்ஷன் க்ளீனா இருக்கணும்” என்று கூறிவிட்டாராம்.

ஆக மொத்தம் கத்தி சண்டை படத்தில் வடிவேலு இருப்பார். சூரி இருப்பார். ஆனால் இரண்டு பேரும் தனித்தனியாக ஸ்கிரினில் தோன்றுவார்கள். சிரிப்பதும், சிரிக்காததும் உங்கள் பாடு!
மேலும் வாசிக்க…

விமானத்தில் பைலட்டையே தெறிக்க விட்ட சூரியின் தாயார்..!!

9:50 PM |
ஒரு சராசரி குடும்பத்தில் பிறந்து வளர்ந்த சூரி, இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக உருவெடுத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இவர் தனது தாயாரை முதல்முறையாக விமானத்தில் அழைத்து சென்றுள்ளார்.

இந்த அனுபவம் குறித்து தற்போது டிவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், ” அம்மாவின் முதல் விமானபயணம். என்னதான் இருந்தாலும் நம்மூரு பஸ்மாதிரி வராதுப்பானு அம்மா சொல்ல, பைலட்டே தெறிச்சிட்டாரு..” என ஜாலியாக ட்வீட் தட்டியுள்ளார்.
மேலும் வாசிக்க…

மக்களுக்கு கழிப்பறை கட்ட ரூ 80,000 வழங்கிய விஷால்..!!

12:14 AM |
ராஜபாளையம் பகுதி மக்களுக்கு கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர விரும்பிய விஷால், அதற்காக ரூ 80 ஆயிரத்தை வழங்கி இருக்கிறார். விஷால் தற்போது முத்தையா இயக்கத்தில் மருது படப்பிடிப்பில் நடித்து வருகிறார்.

இதற்காக சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்ட படக்குழுவினருடன் அவர் ராஜபாளையம் பகுதியில் முகாமிட்டுள்ளார். இந்நிலையில் அங்குள்ள மக்கள் கழிப்பிட வசதியின்றி அவதிப்படுவதைத் தெரிந்து கொண்ட விஷால், அப்பகுதி நகராட்சி ஆணையர் தனலட்சுமியுடன் இதுகுறித்து கலந்துரையாடினார்.

பின்னர் அரசு உதவியுடன் அப்பகுதி மக்களுக்கு கழிப்பறைகளை கட்டுவதென்றும், மானியத் தொகை போக மீதமிருக்கும் தொகையை படக்குழு சார்பில் அளிக்கவும் மருது படக்குழு முன்வந்தது. முதல்கட்டமாக 10 கழிப்பறைகளை கட்ட ரூ 80 ஆயிரத்தை மருது படக்குழு நகராட்சி ஆணையர் தனலட்சுமியிடம் வழங்கி இருக்கின்றனர்.

மேலும் வருகின்ற 23 ம் தேதி ராஜபாளையம் பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் கலந்துரையாடல் நிகழ்த்தி மீதமிருக்கும் மக்களுக்கும் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்தித் தர மருது படக்குழு முடிவு செய்திருக்கிறது. விஷால் தற்போது மருது படத்திற்காக ஐயப்ப பக்தராக மாறியிருக்கிறார்.

விஷால் ஐயப்ப பக்தராக நடிக்கும் காட்சிகளை தற்போது மருது குழுவினர் படம்பிடித்து வருகின்றனர். விரைவில் மருது படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.
மேலும் வாசிக்க…

தல அஜித்தால் என்னால் 2 நாள் நடிக்க முடியாமல் போனது- சூரி ஓபன் டாக்..!!

11:50 PM |
தமிழ் சினிமாவில் தற்போது நம்பர் 1 நகைச்சுவை நடிகர் என்றால் கண்களை மூடிக்கொண்டு சொல்லலாம் அது சூரி என்று. சந்தானம் ஹீரோவாகி விட்டதால் சூரி காட்டி அடை மழை தான்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு கல்லூரியில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட இவரிடம் வேதாளம் படத்தில் நடித்தது குறித்து கேட்டனர்.

அதற்கு அவர் ‘நான் தீவிர அஜித் சாரின் ரசிகன், நீங்கள் அஜித் சாரை நேரில் பார்த்தால் எப்படி ரியாக்ஸன் கொடுப்பீர்களோ, அதை தான் நானும் செய்தேன், என்னால் நடிக்கவே முடியவில்லை, 2 நாட்கள் ஆனது நான் அவருடன் இணைந்து நார்மலாக நடிக்க’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அஜித் - கண்ணீர் விட்ட சூரி..!!

9:52 AM |
நகைச்சுவை நடிகர் சூரி தனது 38–வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.

இதுவரை கொண்டாடப்பட்ட இவரது பிறந்த நாளை விட இவ்வருடம் அஜித்,விஜய் நடிகர்களுக்கான பிறந்தநாளைப் போன்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

தமிழ் நாடு முழுவதும் ரசிகர்களால் போஸ்ரர் அடித்து ஒட்டப்பட்ட தோடு சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சூரியின் கட்அவுட் கட்டப்பட்டுள்ளது.

சென்னை, மதுரை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், கடலூர் உள்ளிட்ட இடங்களில் ரத்த தானம் வழங்கப்பட்டது. சென்னை விஜயா மருத்துவமனையில் நடிகர் சூரி ரத்தம் வழங்கி, ரத்த தான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.

அவரைத் தொடர்ந்து ரசிகர்களும் நண்பர்களும் ரத்த தானம் செய்தனர். நடிகர் அஜித்குமார் சூரி குடும்பத்தினரை நேரில் வரவழைத்து சூரிக்கு வாழ்த்து தெரிவித்தார். சூரியின் தாயார் சேங்கை அரசியிடம் மனம்விட்டுப் பேசிய அஜித் தன் குழந்தைகளின் புகைப்படங்களை அவரிடம் காட்டி நெகிழ வைத்தார். சூரியின் மகன் சர்வானை மடியில் வைத்து கொஞ்சிய அஜித், சூரி குடும்பத்தினர் அனைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவனத் தலைவர் வி.ஜி.சிற்றரசு ஆகியோர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு சூரிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஷால் சூரிக்காக வடபழனி முருகன் கோயிலில் அன்னதானம் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் சிவகார்த்திகேயன் தங்கச் சங்கிலி பரிசளித்தார். நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, விமல்,விஷ்ணு,அருள்நிதி, சுப்பு, சாந்தனு,டைரக்டர்கள் விக்ரமன், மனோபாலா,சமுத்திரகனி,சுசீந்திரன்,பாண்டிராஜ்,பொன்ராம், எஸ்.ஆர்.பிரபாகரன், முத்தையா தயாரிப்பாளர்கள் வேந்தர் மூவிஸ் மதன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ‘ரெட் ஜெயன்ட்’ செண்பகமூர்த்தி, திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஓன் புரொடக்சன்ஸ் ஆர்.ராம்குமார், பி.ஆர்.முருகன் ஆகியோர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்களினூடாக நடிகர் சூரி அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களால் வாழ்த்துச் செய்தி தெரிவித்தார்கள்.

தேடிக்கோ.கொம் சார்பாக நாமும் நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கின்றோம்.





மேலும் வாசிக்க…
2015 Thediko.com