நகைச்சுவை நடிகர் சூரி தனது 38–வது பிறந்த நாளை கேக் வெட்டி கொண்டாடினார். அவருக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தனர். பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ரசிகர்கள் ரத்த தானம் செய்தனர்.
இதுவரை கொண்டாடப்பட்ட இவரது பிறந்த நாளை விட இவ்வருடம் அஜித்,விஜய் நடிகர்களுக்கான பிறந்தநாளைப் போன்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
தமிழ் நாடு முழுவதும் ரசிகர்களால் போஸ்ரர் அடித்து ஒட்டப்பட்ட தோடு சென்னையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட சூரியின் கட்அவுட் கட்டப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, பொள்ளாச்சி, திருப்பூர், கரூர், கடலூர் உள்ளிட்ட இடங்களில் ரத்த தானம் வழங்கப்பட்டது. சென்னை விஜயா மருத்துவமனையில் நடிகர் சூரி ரத்தம் வழங்கி, ரத்த தான நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார்.
அவரைத் தொடர்ந்து ரசிகர்களும் நண்பர்களும் ரத்த தானம் செய்தனர். நடிகர் அஜித்குமார் சூரி குடும்பத்தினரை நேரில் வரவழைத்து சூரிக்கு வாழ்த்து தெரிவித்தார். சூரியின் தாயார் சேங்கை அரசியிடம் மனம்விட்டுப் பேசிய அஜித் தன் குழந்தைகளின் புகைப்படங்களை அவரிடம் காட்டி நெகிழ வைத்தார். சூரியின் மகன் சர்வானை மடியில் வைத்து கொஞ்சிய அஜித், சூரி குடும்பத்தினர் அனைவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அகில இந்திய முக்குலத்தோர் பாசறையின் நிறுவனத் தலைவர் வி.ஜி.சிற்றரசு ஆகியோர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு சூரிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். நடிகர் விஷால் சூரிக்காக வடபழனி முருகன் கோயிலில் அன்னதானம் வழங்கி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
நடிகர் சிவகார்த்திகேயன் தங்கச் சங்கிலி பரிசளித்தார். நடிகர்கள் பிரபு, விக்ரம் பிரபு, விமல்,விஷ்ணு,அருள்நிதி, சுப்பு, சாந்தனு,டைரக்டர்கள் விக்ரமன், மனோபாலா,சமுத்திரகனி,சுசீந்திரன்,பாண்டிராஜ்,பொன்ராம், எஸ்.ஆர்.பிரபாகரன், முத்தையா தயாரிப்பாளர்கள் வேந்தர் மூவிஸ் மதன், அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா, ‘ரெட் ஜெயன்ட்’ செண்பகமூர்த்தி, திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், ஓன் புரொடக்சன்ஸ் ஆர்.ராம்குமார், பி.ஆர்.முருகன் ஆகியோர் சூரிக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
சமூக வலைத்தளங்களினூடாக நடிகர் சூரி அவர்களுக்கு ஏராளமான ரசிகர்களால் வாழ்த்துச் செய்தி தெரிவித்தார்கள்.
தேடிக்கோ.கொம் சார்பாக நாமும் நடிகர் சூரிக்கு பிறந்தநாள் வாழ்த்தை தெரிவிக்கின்றோம்.
Tags:
Ajith
,
Cinema
,
Gallery
,
Soori
,
Soori 38th Birthday
,
Thala
,
Thala Ajith with Soori's family Photos
,
Thala56
,
சினிமா
,
சூரி