நடிகர் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் AAA படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் கலக்கவுள்ளார். இந்நிலையில் இன்று இப்படத்தின் மதுர மைக்கேல் கதாபாத்திரத்தின் அறிமுக டீசரை வெளியிட்டது படக்குழு.
இந்த டீசர் மதுர மைக்கேல் கதாபாத்திரத்தின் மாஸ்ஸை காட்டுகிறது. மேலும் இந்த டீஸரிலே ஷ்ரேயாவுடன் லிப்லாக் காட்சியும் இடம்பெற்றுள்ளது. AAA படக்குழுவில் விசாரித்த போது, சிம்புவுக்கு இப்படத்தில் மூன்று, நான்கு லிப்லாக் காட்சிகள் உள்ளதாம்.
மேலும் இப்படத்தை தற்போதுள்ள இளைஞர்களுக்கான பொழுதுபோக்கு அம்சங்கள் அதிகம் இடம்பெற செய்துள்ளாராம் இயக்குனர் ஆதிக்.
ராதிகா ஆப்தே, 'வெற்றி செல்வன்' என்ற படத்தின் மூலம் தமிழ் பட உலகுக்கு அறிமுகமானார். அந்த படத்தில் அவர் அஜ்மலுக்கு ஜோடியாக நடித்தார். அதையடுத்து பிரகாஷ்ராஜின் 'தோனி,' கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகு ராஜா ' ஆகிய படங்களில் அவர் நடித்திருந்தாலும், 'கபாலி' படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபலமானார்.
ராதிகா ஆப்தே, 'பர்சேட்' என்ற இந்தி படத்தில் நடித்தார். இந்த படத்தில், அவர் ஒரு நிர்வாண காட்சியில் நடித்து இருக்கிறார். இப்படத்தின் சில காட்சிகள் சில நாட்களுக்கு முன்னர் இணையத்தில் லீக் ஆனது. அதில், ராதிகா ஆப்தேவும், அதில் ஹுசைனும் ஆடைகள் இல்லாமல் இருப்பது போன்ற காட்சிகள் இருந்தது. இது, ‘ராதிகா ஆப்தேவின் ஆபாசக் காட்சி' என்ற பெயரில் இணையத்தில் வைரலாக பரவியது.
தற்போது இந்த சர்ச்சை தணிந்து வந்த நிலையில் தற்போது பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு ராதிகா ஆப்தே கோபமாக பதில் அளித்தார்.
நிருபர் ஒருவர் படம் வெளியாவதற்கு முன் அந்த சர்ச்சைக்குரிய வீடியோ காட்சி வெளியிடபட்டு படத்தை வெற்றிபெற வைக்க இந்த சர்ச்சைக்குரிய காட்சி வெளியிடபட வேண்டுமா? என கேட்டார்.
இதனால் ராதிகா ஆப்தே மிகுந்த கோபமடைந்து அவர் நிருபரிடம் கூறியதாவது:-
மன்னிக்கவும், ஆனால் உங்கள் கேள்வி அபத்தமானது. சர்ச்சைகள் உங்களை போன்றவர்களால் மக்கள் மூலம் செய்யபட்டுகின்றது.நீங்கள் அந்த வீடியோவை பார்கிறீர்கள் பின்னர் அதை அடுத்தவர்களுக்கு வழங்குகிறீர்கள்,உங்களைபோன்ற நபர்களால் தான் இது போன்ற சர்ச்சைகள் ஏற்படுகிறது.
நான் ஒரு நடிகை, நான் எனக்குரிய வேலையை சிறப்பாக செய்து உள்ளேன்.நீங்கள் உங்கள் கூடாரத்தை விட்டு வெளியே வாருங்கள் உலக சினிமாவை பாருங்கள். வெளிநாட்டு மக்கள் என்ன செய்கிறார்கள் என பாருங்கள், எந்த மக்கள் வெற்றிகரமாக செயல்படுகிறார்கள் என பாருங்கள்.அவர்களின் உடல்களை பார்த்து அவர்கள் வெட்கபடுவது இல்லை.
அவ்வாறு நிருந்தால் ஒரு வேளை நீங்கள் என்னிடம் இந்த கேள்வியை கேட்டு இருக்க மாட்டீர்கள்.அவர்களின் உடல்களை பார்த்து வெட்கப்படும் மக்கள் மற்றவர்களின் உடல்களைபற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம் உடையவர்களாக இருப்பார்கள்.நீங்கள் ஒர் உடலை நாளை நிர்வாணமாக பார்க்க வேண்டும் என்றால் முதலில் உங்கள் உடலை கண்ணாடியில் பார்த்து கொள்ளுங்கள் அல்லது மாறாக என் வீடியோவை உங்களைபோன்று பாருங்கள். என கூறினார்.
பின்னர் அந்த நிருபர் தங்கள் மனம் வருந்தி இருந்தால் மன்னிக்கவும் என மன்னிப்பு கோரினார். அதற்கு ராதிகா ஆப்தே எனக்கு மிக வருத்தமாக இருக்கிறது.நீங்கள் உங்களைபற்றி முழுமையாக தெரிந்து கொள்ளவேண்டும் முதலில் அதை செய்யுங்கள் என கூறினார்.
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தின் முடிவில் மூன்று நடிகர்களை சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளனர். இவர்கள் மூவரும் நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும், சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
மேலும், காவிரி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பது, கன்னட நடிகர்களின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டது.இதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கண்ணே கலைமானே, ஆடைகட்டி வந்த நிலவோ என்று கண்ணியமாக காதலையும் பெண்ணையும் சித்தரித்த சினிமாவில், லூசுப்பெண்ணே, எவன்டி உன்னை பெத்தான், கைல கெடச்சா செத்தான் என்று கண்ணியத்தை காலில் போட்டு மிதித்தவர் சிம்பு.
அவரே இயற்றி பாடிய பாடல்கள் பெரும்பாலும் சர்ச்சையை சட்டையாக அணிந்தவை. அனைத்தின் உச்சமாக அவரது பீப் பாடல் அமைந்தது. அவர் பாடாமல் விட்ட இடங்கள் ஆபாசமான அர்த்தத்தை தந்து இளசுகளையும் முகம் சுழிக்க வைத்தது. போலீஸ், கேஸ், கோர்ட் என்று சிம்பு இழுத்தடிக்கப்பட்டார்.
ஆனாலும், அவர் திருந்துவதாக இல்லை. தற்போது நடித்துவரும் அன்பாதவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளார் சிம்பு. அதன் சில வரிகள் வெளியாகியுள்ளன.
என்னைவிட்டு யாரையாச்சும் நீ கல்யாணம்தான் பண்ணிகிட்டா கொன்னேபுடுவேன்.. - என்று தொடங்கும் அந்தப் பாடல் கடும் வெறுப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஒருதலை காதல் காரணமாக தமிழகத்தில் இளம் பெண்கள் தொடர்ந்து கொல்லப்படுகிறார்கள்.
அவர்களின் மீது ஆசிட் வீசப்படுகிறது. ஒருதலை காதலர்களின் தொல்லை அதிகரித்துவரும் இந்த சூழலில், என்னை கல்யாணம் பண்ணாவிட்டால் கொன்றுவிடுவேன் என்ற சிம்புவின் பாடல் எரிகிற கொள்ளியில் எண்ணையை ஊற்றும் செயல்.
சினிமாவில் நாயகன் எவ்வளவு தறுதலையாக இருந்தாலும் நாயகி அவனை காதலித்தாக வேண்டும். அந்த தாக்கத்தில்தான் தெருவோடு போகிற பொறுக்கிகள், என்னை காதலி என்று பெண்களை வற்புறுத்துகிறார்கள். மறுத்தால் கொலை செய்கிறார்கள்.
அந்த மனோபாவத்தை இந்த பாடல் அங்கீகரிப்பது போலுள்ளது. த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா என்ற விடலை படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்தான் இந்தப் படத்தை இயக்குகிறார். ஒரு சிம்புவையே தாங்க முடியவில்லை. இதில் ஆதிக் ரவிச்சந்திரனுடன் காம்பினேஷன் வேறு. என்னென்ன அநாகரிகங்கள் வரப்போகிறதோ.
நயன்தாரா-விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடிதான்’ படத்திற்கு இசையமைத்தவர் அனிருத். இப்படத்திற்கு பிறகு நயன்தாரா சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ஜெயம் ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான ஆரம்பகட்ட பணிகளை ஜெயம் ராஜா விறுவிறுப்பாக செய்துவருகிறார்.
இந்நிலையில், இப்படத்தின் தலைப்பை அனிருத் நாளை வெளியிடப்போவதாக தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தற்போது அனிருத் இசையமைப்பில் ‘ரெமோ’ படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
சிவகார்த்திகேயன்-ஜெயம் ராஜா இணையவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புகள் ‘ரெமோ’ படம் வெளியான பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இப்படம் குறித்து மேலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் தலைப்புக்காக நாளை வரை காத்திருக்கவும்.