கீர்த்திசுரேஷ் - சதிஷ் இவர்களுடைய அடுத்த கிசுகிசு..!!

10:29 PM |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியன்களில் முன்னணியில் இருப்பவர் சதிஷ். வழக்கமாக கதாநாயகர்களுக்கு தான் கிசுகிசு வரும்.

ஆனால் சதிஷ்க்கு தொடர்ந்து கீர்த்தியுடன் கிசுகிசு வருகிறது.  ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய இவர், பைரவா படப்பிடிப்பிலிருந்து தான் நானும், கீர்த்தியும் வந்தோம். கிளம்பும் போதே என்ன கலர் கேட்டேன் புளு கலர் என்று சொன்னார்.

அதனால் தான் நான் கருப்பு சட்டையில் வந்தேன். கடைசியில் அவரும் கருப்பு உடையில் வந்துள்ளார். இதைவைத்து இன்று டிவிட்டரில் கிசுகிசு பரப்பி விட தயாராகி விடுவார்கள் என்றார்.
மேலும் வாசிக்க…

நான் தான் உன் மாமியார் பேசுறேன் - சதிஷியை போனில் கலாய்த்த கீர்த்தியின் அம்மா..!!

11:27 PM |
கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சதிஷுக்கு போன் செய்து நான் தான்பா உன் மாமியார் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.

பைரவா பட துவக்க விழாவில் கீர்த்தி சுரேஷும், நகைச்சுவை நடிகர் சதிஷும் மாலையும் கழுத்துமாக நின்றனர். இதை பார்த்த சிலர் ஏற்கனவே ரகசியமாக காதலித்து வந்த கீர்த்தியும், சதிஷும் திருமணம் செய்து கொண்டதாக கிளப்பிவிட்டனர்.

 இதையடுத்து கீர்த்தி, சதீஷ் ஜோடியாக நின்ற புகைப்படம் இணையதளங்களில் தீயாக பரவியது. அதன் பிறகே உண்மை தெரிய வந்தது. இந்நிலையில் கீர்த்தியும், சதிஷும் ட்விட்டரில் செல்லமாக பேசியதை பார்த்தவர்கள் அவர்களுக்கு இடையே காதல் கன்பர்ம் என்றார்கள்.

இது குறித்து சதிஷ் கூறுகையில், யாரோ பட விழாவின் புகைப்படத்தை கிராப் செய்து எனக்கும், கீர்த்திக்கும் திருமணமாகிவிட்டது என்று கூறிவிட்டார்கள். இதை என் வீட்டிலும் சரி, கீர்த்தி வீட்டிலும் சரி சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

அந்த செய்தியை பார்த்த கீர்த்தியின் அம்மா எனக்கு போன் செய்து நான் தான்பா உன் மாமியார் பேசுகிறேன் என்று கூறி கலாய்த்தார். கீர்த்தி என்னுடைய டார்லிங் இல்லை நல்ல தோழி என்றார்.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com