கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா சதிஷுக்கு போன் செய்து நான் தான்பா உன் மாமியார் பேசுகிறேன் என்று கூறியுள்ளார்.
பைரவா பட துவக்க விழாவில் கீர்த்தி சுரேஷும், நகைச்சுவை நடிகர் சதிஷும் மாலையும் கழுத்துமாக நின்றனர். இதை பார்த்த சிலர் ஏற்கனவே ரகசியமாக காதலித்து வந்த கீர்த்தியும், சதிஷும் திருமணம் செய்து கொண்டதாக கிளப்பிவிட்டனர்.
இதையடுத்து கீர்த்தி, சதீஷ் ஜோடியாக நின்ற புகைப்படம் இணையதளங்களில் தீயாக பரவியது. அதன் பிறகே உண்மை தெரிய வந்தது. இந்நிலையில் கீர்த்தியும், சதிஷும் ட்விட்டரில் செல்லமாக பேசியதை பார்த்தவர்கள் அவர்களுக்கு இடையே காதல் கன்பர்ம் என்றார்கள்.
இது குறித்து சதிஷ் கூறுகையில், யாரோ பட விழாவின் புகைப்படத்தை கிராப் செய்து எனக்கும், கீர்த்திக்கும் திருமணமாகிவிட்டது என்று கூறிவிட்டார்கள். இதை என் வீட்டிலும் சரி, கீர்த்தி வீட்டிலும் சரி சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த செய்தியை பார்த்த கீர்த்தியின் அம்மா எனக்கு போன் செய்து நான் தான்பா உன் மாமியார் பேசுகிறேன் என்று கூறி கலாய்த்தார். கீர்த்தி என்னுடைய டார்லிங் இல்லை நல்ல தோழி என்றார்.
Tags:
Cinema
,
கீர்த்தி சுரேஷ்
,
சதிஷ்
,
சினிமா
,
தோழி
,
மாமியார்
,
மேனகா