'ரெமோ'வுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் உதவியது எப்படி? வெளிவராத தகவல்..!!

1:18 AM |
நடிகர் சிவகார்த்திகேயன், கீர்த்திசுரேஷ் நடிப்பில் பாக்யராஜ் கண்ணன் இயக்கிய 'ரெமோ' திரைப்படம் சமீபத்தில் உலகம் முழுவதும் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி படமாகியுள்ளது.

இந்த படத்தின் நன்றி அறிவிப்பு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட ஆஸ்கார் நாயகன் ரசூல் பூக்குட்டி பேசியபோது, 'எனக்கு ஆஸ்கார் விருதை பெற்று தந்த 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தை அடுத்து அதிக சேலஞ்ச் கொடுத்த படம் 'ரெமோ'தான். இந்த படத்தின் டப்பிங் பணியின்போது ஏ.ஆர்.ரஹ்மான் எனக்கு பல உபயோகமுள்ள டிப்ஸ்களை கொடுத்தார்' என்று கூறினார்.

ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் பணிபுரியவில்லை என்றாலும் 'ரெமோ'வின் வெற்றிக்கு அவரும் மறைமுகமாக ஒரு காரணமாக இருந்துள்ளார் என்பது ரசூல் பூக்குட்டியின் பேச்சில் இருந்து தற்போது தெரியவந்துள்ளது.  ரசூல் பூக்குட்டி 'ரெமோ' படத்தின் சவுண்ட் எஞ்சினியராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

கீர்த்திசுரேஷ் - சதிஷ் இவர்களுடைய அடுத்த கிசுகிசு..!!

10:29 PM |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியன்களில் முன்னணியில் இருப்பவர் சதிஷ். வழக்கமாக கதாநாயகர்களுக்கு தான் கிசுகிசு வரும்.

ஆனால் சதிஷ்க்கு தொடர்ந்து கீர்த்தியுடன் கிசுகிசு வருகிறது.  ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய இவர், பைரவா படப்பிடிப்பிலிருந்து தான் நானும், கீர்த்தியும் வந்தோம். கிளம்பும் போதே என்ன கலர் கேட்டேன் புளு கலர் என்று சொன்னார்.

அதனால் தான் நான் கருப்பு சட்டையில் வந்தேன். கடைசியில் அவரும் கருப்பு உடையில் வந்துள்ளார். இதைவைத்து இன்று டிவிட்டரில் கிசுகிசு பரப்பி விட தயாராகி விடுவார்கள் என்றார்.
மேலும் வாசிக்க…

கீர்த்திசுரேஷின் அடுத்த தமிழ்ப்பட டைட்டில் அறிவிப்பு..!!

12:13 AM |
கடந்த 2013ஆம் ஆண்டு பிர்யதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால், கீர்த்தி சுரேஷ் நடித்து வெளிவந்த திரைப்படம் 'கீதாஞ்சலி. சூப்பர் ஹிட் ஆன இந்த திரைப்படம் தற்போது தமிழில் வெளியாக டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. 'வெண்ணிலா மின்னலா" என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது.

ரஜினிமுருகன் படத்தின் மாபெரும் வெற்றி, விஜய் 60 படத்தின் நாயகி ஆகியவற்றால் கீர்த்திசுரேஷின் கோலிவுட் மார்க்கெட் தற்போது உயர்ந்துள்ளதால் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் வாசிக்க…

மீண்டும் ஒரு கில்லி விஜய் ரசிகர்களுக்கு செம்ம விருந்து..!!

11:10 PM |
இளையதளபதி விஜய் நடித்துமுடித்துள்ள ‘தெறி’ திரைப்படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் விஜய் 60′ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கிவிட்டது. இந்நிலையில் சமீபத்தில் விஜய் 60 படத்தின் தொழில்நுட்ப கலைஞர்கள் விஜய்யை நேரில் சந்தித்தனர்

இந்நிலையில் இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த படக்குழுவினர் ‘விஜய் நடித்த சூப்பர் ஹிட் படமான கில்லியை போலவே இந்த படமும் ஒரு ரேஸ் த்ரில்லர் என்றும், விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ரசிக்கும் வகையில் இந்த படம் தயாராகும் என்றும் தெரிவித்தனர்.

இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக முதலில் நியமனம் செய்யப்பட்டிருந்த மதி, சுசீந்திரன் – உதயநிதி படத்தின் படப்பிடிப்பில் பிசியாக இருப்பதால் ‘மைனா’ ஒளிப்பதிவாளர் சுகுமார், ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்திசுரேஷ் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் தொடங்கவுள்ளது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com