விஷால் நடித்த கதகளி படத்தில் சர்ச்சைக்குரிய காட்சி நீக்கம்..!!

12:41 AM |
விஷால் நடித்த ‘கதகளி’ பொங்கல் முதல் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் குறிப்பிட்ட சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வசனங்கள் உள்ளன. அது தொடர்பான காட்சியை நீக்க வேண்டும் என்று கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் கே.பி.மணி பாபா என்பவர் மனுதாக்கல் செய்துள்ளார்.

மேலும் பல சிறுபான்மையினர் அமைப்புகளும், பிறர் மனம் புண்படும் படியாக இருக்கும் அந்த வாகனங்களை நீக்க வேண்டும் என்று விஷாலிடம் நேரடியாக வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று தணிக்கை அதிகாரிகளின் ஒப்புதலுடன் அந்த வசனம் அமைந்துள்ள காட்சியை நீக்க விஷால் தானாகவே முன்வந்து முயற்சி மேற்கொண்டார்.

இதனால், கதகளி படத்தில் வில்லன் விஷாலுடன் பேசுவதாக வரும் 20 நொடி வசன காட்சி நீக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தப்பட்டவர்களுக்கும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக விஷாலின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் வாசிக்க…

மீண்டும் நிரூபித்த நடிகர் விஷால்..!!

1:27 AM |
ஏற்கெனவே காரைக்குடியில் திருட்டு டிவிடி விற்கப்பட்டதை கண்டுபிடித்து அவர்களுக்கு தகுந்த தண்டனை வாங்கிக் கொடுத்திருந்தார் நடிகர் விஷால். தற்போது அதேபோல் பெங்களூரில் திருட்டு டிவிடிக்களை கண்டுபிடித்துள்ளார்.

கதகளி படம் கடந்த 14ம் தேதி பெங்களூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட திரையரங்கில் இருந்து திருட்டுத்தனமாக பதிவு செய்யப்பட்டதை விஷால் ஆதாரபூர்வமாக கண்டுபிடித்துள்ளார். இதனை அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.தற்போது அந்த திரையரங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.


மேலும் வாசிக்க…

கதகளி படத்தில் இழிவான காட்சி.. பாண்டிராஜ் வீடு முன்பு போராட்டம்..!!

11:13 PM |
கதகளி படத்தில் முடிதிருத்தும் தொழிலாளர்களை இழிவுபடுத்துவது போல் காட்சி அமைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவித்து, அப்பட இயக்குநர் பாண்டிராஜ் வீடு முன்பு போராட்டம் நடத்தப்போவதாக முடிதிருத்தும் தொழிலாளர் சங்கம் அறிவித்துள்ளது.கடந்த வாரம் வியாழனன்று பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீசானது கதகளி படம்.

இப்படத்தில் பாண்டிராஜ் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்திருந்தார். திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் இப்படத்திற்கு தற்போது புதிய வடிவில் பிரச்சினை முளைத்துள்ளது. அதாவது, இப்படத்தில் வில்லன் முடி திருத்தும் தொழிலாளர்களை இழிவாக பேசுவது போல் அமைக்கப்பட்டுள்ள காட்சியை நீக்க வேண்டும், இல்லையென்றால் பாண்டிராஜ் வீட்டின் முன் போராட்டம் நடத்தப்படும் என முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக முடிதிருத்தும் தொழிலாளர் நல சங்கத்தின் மாநில தலைவர் எம்.நடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சர்ச்சை வசனம்...
நடிகர் விஷால் நடித்து பொங்கல் பண்டிகைக்கு வெளி வந்துள்ள கதகளி திரைப்படத்தில் முடி திருத்தும் தொழில் புரிபவர்கள் அதே தொழில் தான் புரிய வேண்டும் என வில்லன் நடிகர் வசனத்தில் உள்ளதால் எங்கள் தொழில் புரிபவர்கள் மனதில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

காட்சிகளை நீக்க வேண்டும்...
எனவே, உடனடியாக அந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கவில்லை என்றால் போராட்டம் நடத்துவதாக முடிவு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இழிவான காட்சி...
மேலும், இப்பிரச்சினை தொடர்பாக தஞ்சை மாவட்ட முடி திருத்தும் தொழிலாளர் நல சங்க செயலாளர் டீலக்ஸ் ஜெயபால் நீடாமங்கலத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ‘பொங்கல் பண்டிகைக்கு வெளி வந்துள்ள கதகளி திரைப்படத்தில் சேவை சமூகங்களான மருத்துவர், சலவை தொழிலாளர், அருந்ததியர் ஆகிய சாதிகளை வில்லன் இழிவாக பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது.

போராட்டம்...
இந்த காட்சியை உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால் இயக்குனர் பாண்டிராஜ் வீடு முன்பு அவரை கண்டித்தும், தணிக்கை குழுவை கண்டித்தும் போராட்டம் நடத்துவோம்.

சாதிப்பிரச்சினை...
தமிழக சினிமா சென்சார் போர்டு சாதி பிரச்னையை தூண்டி விடுகிறது.  இனிமேலும் சமுதாயங்களை இழிவு படுத்தும் காட்சிகள் சினிமாவில் இடம் பெற்றால் சம்மந்தப்பட்ட இயக்குனர் மற்றும் தணிக்கை குழுவின் மீது எங்கள் தொழிற்சங்க வழக்கறிஞர் மூலம் வழக்கு தொடருவோம்' எனத் தெரிவித்தார்.

மேலும் வாசிக்க…

வசூல் ராஜாவாக மாறிய ரஜினிமுருகன்..!!

12:58 AM |
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரஜினிமுருகன் படம் ரிலீஸான நான்கே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.19.5 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த ஆண்டு பொங்கலுக்கு தல, தளபதி, சூப்பர் ஸ்டார் படங்கள் எதுவும் ரிலீஸாகவில்லை. சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன், விஷாலின் கதகளி, சசிகுமாரின் தாரை தப்பட்டை, உதயநிதி ஸ்டாலினின் கெத்து ஆகிய நான்கு படங்கள் பொங்கல் பண்டிகை அன்று ரிலீஸாகின. நான்கு படங்களுமே ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ரஜினிமுருகன்
பொங்கலுக்கு நான்கு படங்கள் ரிலீஸானபோதிலும் பொன்ராம் இயக்கத்தில் சிவா, கீர்த்தி சுரேஷ் நடித்த ரஜினிமுருகன் தான் வெற்றியாளராக ஆகியுள்ளது.

வசூல்
ரஜினிமுருகன் ரிலீஸான நான்கே நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ. 19.5 கோடி வசூல் செய்துள்ளது. பாக்ஸ் ஆபீஸில் தொடர்ந்து தனது வசூல் வேட்டையை நடத்தி வருகின்றது.

சென்னை
ரஜினிமுருகன் சென்னையில் மட்டும் நான்கு நாட்களில் ரூ.96.21 லட்சம் வசூலித்துள்ளது. ரஜினிமுருகனை அடுத்து சென்னையில் தாரை தப்பட்டை ரூ. 79.73 லட்சம் வசூல் செய்துள்ளது.

குடும்ப படம்
ரஜினி முருகன் படத்தை மக்கள் குடும்பம், குடும்பமாக சென்று பார்த்து வருகிறார்கள். அதனால் படம் நிச்சயம் பல கோடிகளை வசூல் செய்யும் என்று கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

விஷாலின் முத்தக்காட்சிக்கு கட்..!!

1:57 AM |
விஷால் நடித்துள்ள கதகளி படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. பாண்டிராஜ் இயக்கியுள்ள இந்த ஆக்ஷன் த்ரில்லர் படத்தில் மெட்ராஸ் புகழ் கேத்ரின் த்ரிஷா, விஷாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

படத்தின் ட்ரைலரில் ஒரு முத்தக்காட்சி வைக்க முதலில் திட்டமிட்டார்களாம், ஆனால் சென்சார் போர்டு அதை சீனை வெட்டிய பிறகே வெளியிட அனுமதி அளித்துள்ளார்கள்.

ட்ரைலரை போல முழு படத்திற்கும் நடந்து விடக்கூடாது, என்பதற்காக படத்தில் படு ஆபாசமாக எதுவும் இல்லாமல் இருக்க, முகத்தை அருகில் கொண்டு வருவதை போல காட்டிவிட்டு, முத்த காட்சியை வெட்டிவிட்டார்களாம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com