கனடா கணவன்,மனைவியை கொலை செய்த பிரியமனவளே தொடர் – பரபரப்பு தகவல்கள்

9:55 PM |
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாடகம் ‘பிரியமானவள்’. இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரங்களாக இருப்பவர்கள் இலங்கை போரின் போது அங்கிருந்து தப்பி தமிழ்நாட்டில் தஞ்சம் புகுந்த அண்ணன், தங்கை.

இவர்கள் பல வருடங்கள் கழித்து ஒரு புகைப்படத்தால் இணைவார்கள். சமீபத்தில் ஒளிபரப்பட்ட இந்த எபிசோடில், அந்த இருவரின் பெற்றோர் என கூறி வீட்டில் ஒரு போட்டோவை தொங்கவிட்டிருப்பார்கள். அவர்கள் இறந்துவிட்டதாகவும் கூறுவார்கள்.

அந்த புகைப்படத்தால் தற்போது கனடாவில் வசித்துவரும் ஒரு தம்பதிக்கு பெரிய மனஉளைச்சல் ஏற்பட்டுள்ளது.

ஏனென்றால் அந்த ஜோடியின் புகைப்படத்தை அவர்கள் அனுமதி இல்லாமல் பிரியமானவள் குழு பயன்படுத்தி, “அவர்கள் இறந்துவிட்டார்கள்” என்ற செய்தி பரவியதால் தான்.

கனடாவில் வாழ்கின்ற அந்த ஈழத் தமிழ்த் தம்பதியினர் இந்தப் புகைப்படத்தைப் பார்த்து திடுக்கிட்டுப் போனார்கள். அவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்னர் எடுத்த புகைப்படம் அது. அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களின் புகைப்படம் தொடர் நாடகத்தின் முக்கிய கட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நாடகத்தைப் பார்த்த அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அவர்களை இனம் கண்டு கொண்டு, தொலைபேசியில் விசாரித்து வருகின்றார்கள். உயிரோடு இருக்கின்ற தம்மை, தம்மிடம் கேட்காமலேயே இறந்து போனவர்களின் படமாக நாடகத்தில் பயன்படுத்தியது பற்றி அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

நான் தான் த்ரிஷாவுக்கு கணவனா? பிரமித்த பிரபல நடிகர்..!!

12:43 AM |
பிரபல நடிகை திரிஷா விரைவில் மற்றொரு படத்தில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க உள்ளார். திரில்லர் படமாக உருவாகவுள்ள இந்த படத்திற்கு கர்ஜனை என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில், கல்யாணம் முதல் காதல் வரை தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் சின்னதிரை நடிகர் அமித் பார்கவ் திரிஷாவிற்கு கணவன் வேடம் ஏற்கிறார்.

இது குறித்து அமித் நம்மிடம் கூறுகையில், என் நண்பர் சுந்தர் தான் என்னை இந்த வேடத்திற்கு கர்ஜனை படத்தின் இயக்குனரிடம் சிபாரிசு செய்தார். நான் கல்யாணம் முதல் காதல் வரை நாடகத்தில் நடித்து வருவதால் ஒத்திகை பார்க்காமல் என்னை செலக்ட் செய்துவிட்டார் இயக்குனர். நான் த்ரிஷாவுக்கு கணவானாக நடிப்பதை என்னால் நம்ப முடியவில்லை, பிரம்மிப்பாக உள்ளது.

தற்போது, த்ரிஷா இல்லைதா காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. விரைவில், திரிஷாவின் தேதிகள் கிடைத்தவுடன் அவருடனான காட்சிகள் படமாக்கப்படும் என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com