பயங்கர தீ விபத்து – அமிதாபச்சன், அமீர்கான் உயிர்தப்பினர்..!!

11:34 PM |
மும்பை கிர்காவ் கடற்கரையில் ‘மேக் இன் இந்தியா’ வார விழா கலைநிகழ்ச்சி மேடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் மராட்டிய கவர்னர், முதல்–மந்திரி, அமிதாப் பச்சன் உள்பட முக்கிய பிரமுகர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.

உலகளாவிய தொழில் முதலீட்டை ஈர்க்கும் வகையில் மராட்டிய அரசு சார்பில் மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ வார விழா 6 நாட்கள் நடைபெறுகிறது. பாந்திரா –குர்லா காம்ப்ளக்ஸ், ஒர்லி, கிர்காவ் கடற்கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெறும் விழாவை நேற்று முன்தினம் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

தொடக்க விழாவில் பின்லாந்து பிரதமர் ஜூகு சிபிலியா, சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோப்வன், லிதுவேனியா பிரதமர் அல்ஜிர் டாஸ் பட்கெவிசியஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் 49 நாடுகளில் இருந்து தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

‘மேக் இன் இந்தியா வார விழா’வையொட்டி கிர்காவ் கடற்கரையில் தொழில் கண்காட்சி, கூட்டரங்கம், கலைநிகழ்ச்சிகள் போன்றவற்றிக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை, பந்தல் அமைக்கப்பட்டு இருந்தன. 2–வது நாள் நிகழ்ச்சியாக நேற்று மாலை அங்கு மராத்திய கலாசார கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

இந்த நிகழ்ச்சியை விழா மேடையில் மராட்டிய கவர்னர் வித்யாசாகர் ராவ், மராட்டிய முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, இந்தி நடிகர் அமிதாப்பச்சன், நடிகை ஹேமமாலினி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர்.

பின்னர் அவர்கள் நிகழ்ச்சிகளை பார்த்து ரசிப்பதற்காக மேடையின் கீழ் முதல் வரிசை இருக்கையில் அமர்ந்தனர். ஏறத்தாழ 25 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சிகளை காண்பதற்காக திரண்டு இருந்தார்கள். இதைத்தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் தொடங்கி நடந்து கொண்டிருந்தன. இரவு 7.45 மணி அளவில் மராட்டிய கலாசார கலைநிகழ்ச்சியான ‘லாவனி‘ நடன நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, மேடையில் வண்ண ஒளிக்கீற்றை பாய்ச்சும் ஒரு விளக்கில் இருந்து புகை கிளம்பியது. அந்த விளக்கு மேடையின் கீழ் பகுதியில் இருந்தது. இதனால் அதை யாரும் கவனிக்கவில்லை.

மேடையில் நடனம் ஆடிய பெண்கள் உற்சாகத்துடன் ஆடியபடியே இருந்தனர். பார்வையாளர்கள் நடனத்தை ரசித்து கொண்டு இருந்தனர். அப்போது தீ பரவியதை கவனித்த போலீசார் மேடையில் நடனமாடியவர்களை கீழே இறங்கி செல்லும் படி எச்சரித்தனர். அதிர்ச்சி அடைந்த நடன கலைஞர்கள் அலறி அடித்து கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது.

கடற்கரையோரம் என்பதால் காற்றின் வேகம் காரணமாக அடுத்த சில நொடிகளில் மேடை முழுவதும் தீ மளமளவென பரவி மேலே போடப்பட்டிருந்த பந்தலிலும் பற்றியது. நடன நிகழ்ச்சியை பார்த்து கொண்டு இருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ், முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே, இந்தி நடிகர்கள் அமிதாப்பச்சன், அமீர்கான், நடிகை ஹேமமாலினி ஆகியோர் உடனடியாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். அவர்கள் இந்த பயங்கர தீ விபத்தில் இருந்து உயிர் தப்பினார்கள்.

மேலும் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மேக் இன் இந்தியா வாரவிழாவையொட்டி ஏற்கனவே அங்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து மேடையை நோக்கி தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைக்க போராடினார்கள்.
ஆனால் அவர்களால் தீயை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

நாலாபுறமும் சுற்றி நின்றபடி தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். தீயணைக்கும் பணியில் 16 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டிருந்தன.
சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த தீ விபத்தில் கிர்காவ் கடற்ரையில் மேக் இன் இந்தியா வார விழாவிற்காக போடப்பட்டிருந்த பிரமாண்ட பந்தலும் முற்றிலுமாக எரிந்து போனது. அங்கு அமைக்கப்பட்டிருந்த கூட்டரங்கம், தொழில் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் உள்ளிட்டவை எரிந்து நாசமாகின. அந்த பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது.


இந்தநிலையில் தீ விபத்து பற்றி அறிந்ததும் கூடுதல் தலைமை செயலாளர் கே.பி.பக்ஷி, மும்பை போலீஸ் கமிஷனர் தத்தா பட்சல்கிகர் ஆகியோர் கிர்காவ் கடற்கரைக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். தொடர்ந்து இரவு 9 மணிக்கு மேலும் தீயை அணைக்கும் பணி நடந்தது. தீயை அணைக்கும் பணியை முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிசும் நேரில் பார்வையிட்டார். தீ விபத்துக்கான காரணம் பற்றி விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக அவர் தெரிவித்தார்.

தீ விபத்துக்கு சற்று நேரத்துக்கு முன்பு தான் அமிதாப் பச்சனின் கலை நிகழ்ச்சி, அந்த மேடையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


 
மேலும் வாசிக்க…

சிறுவனின் ஆசையை நிறைவேற்றிய அமீர்கான்..!!

2:27 AM |
அமீர்கானின் தீவிர ரசிகர் நிஹால் பிட்லா. 14 வயதே நிறம்பிய இந்த சிறுவன் அபூர்வ நோயால் பாதிக்கப்பட்டவன். இந்த நோய் காரணமாக அந்த சிறுவனின் முகத்தோற்றமே மாறி விட்டது.

அமீர்கானின் தேரேஜமீன்பர் படத்தை பார்த்த இந்த சிறுவன், பேஸ்புக் பக்கத்தில் தனது படத்தை வெளியிட்டு, இந்தி பட சூப்பர் ஸ்டார். அமீர்கானை சந்திக்க ஆசைப்படுகிறேன். சிறப்பான படத்தில் நடித்த அவருக்கு நன்றி என்று குறிப்பிட்டு இருந்தான்.

இதை அறிந்த அமீர்கான், சிறுவன் நிஹால் பிட்லாவை சந்தித்தார். தனது ஆசை நிறைவேறியதால் அந்த சிறுவன் மிகவும் மகிழ்ந்தான். அவனுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருள் அடங்கிய பார்சல் ஒன்றை கொடுத்தார்.

தேரேஜமீன்பர் பட டி.வி.டி. டூம் பொம்மை ஆகியவை இருந்தன. டி.வி.டி. இருந்த கவரில், அன்புள்ள நிஹாலுக்கு, உன்னை சந்தித்தது அன்பான தருணம். எப்போதும் நீ மகிழ்ச்சியுடன் இருக்க வாழ்த்துக்கள் என்றும் புன்னகையுடன் இரு, அன்புடன் அமீர் என்று எழுதி இருந்தார்.
மேலும் வாசிக்க…

அமீர்கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு அறிவிப்பு – சிவ சேனா!

1:02 AM |
நாட்டில் அதிகரித்து வரும் சகிப்பின்மை குறித்து கருத்து கூறியதால், டெல்லியில் வழக்கு, நாடு முழுவதும் கண்டனம் என்று பல்முனைத் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் முன்னணி பாலிவுட் நடிகர் அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவோம் என்று சர்ச்சைகளுக்கு பேர் போன இந்து அமைப்பான சிவ சேனா அறிவித்துள்ளது.

‘‘என் மனைவி கிரணும், நானும் இத்தனை காலம் இந்தியாவில் வாழ்ந்து விட்டோம். முதல் முறையாக, இந்தியாவை விட்டு நாம் வெளியேறி விடலாமா என என் மனைவி கேட்டார். அவர், தன் குழந்தைகளுக்காக பயப்படுகிறார். எங்களை சுற்றியுள்ள சூழலைக்கண்டு அவர் பயப்படுகிறார். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை பிரித்து பார்க்கவே அவர் அஞ்சுகிறார். நாட்டில் பாதுகாப்பற்ற உணர்வு பெருகி வருவதையே இது காட்டுகிறது’’ என்று அண்மையில் அமீர் கான் தெரிவித்த கருத்துக்கு இந்துத்துவ வலதுசாரி அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்தது.

வழக்கம் போல அமீர்கான் பாகிஸ்தானுக்கு போகட்டும் என்ற வெறுப்புக் குரல்களும் ஓங்கி ஒலித்தன. விரைவில், திரைக்கு வரவிருக்கும் டங்கல் படத்தின் படப்பிடிப்பிற்காக பஞ்சாப் சென்றுள்ள அமீர் கான், லூதியானா நகரில் உள்ள ராடிசன் ப்ளூ ஓட்டலில் தங்கியுள்ள நிலையில், நேற்று அந்த ஓட்டலை முற்றுகையிட்ட சிவசேனா அமைப்பினர் அமீர் கானை கொச்சையான வார்த்தைகளில் திட்டி, அவரது புகைப்படத்தைக் கொளுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய பஞ்சாப் மாநில சிவசேனா தலைவர் ராஜீன் தன்டன், அமீர் கானை அறைபவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு தருவதாக அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “ஓட்டலில் (ராடிசன் ப்ளூ) உள்ள ஊழியர்களுக்கும் மேலாளருக்கும் அமீர்கானின் படப்பிடிப்பு குழுவினருக்கும் நாங்கள் ஒரு வாய்ப்பு கொடுக்கிறோம். வீரம் நிறைந்த தேசப்பற்று மிக்கவர்களுக்கு அமீர் கானை அறையும் ஒவ்வொரு அறைக்கும் 1 லட்ச ரூபாய் பரிசு தரப்படும்” என்று அறிவித்துள்ளார்.

இந்நிலையில், எனக்கு எதிராக செயல்படுபவர்கள் நான் கூறிய கருத்தையே மெய்ப்பிக்கின்றனர் என்று அமீர் கான் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

அமீர்கான் கூறிய ஒரு கருத்தால் நாடே கொதித்து எழுந்தது- வெடித்த பிரச்சனை

1:24 AM |
பாலிவுட் நடிகர்கள் சுதந்திரமாக ஒரு கருத்தையும் கூற முடியாது போல. சமீபத்தில் தான் ஷாருக்கான் நாட்டில் சகிப்பு தன்மை குறைந்து வருகின்றது என கூற, அவருக்கு எதிராக பல கட்சி பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தற்போது அமீர் கான் ஒரு பேட்டியில் தன் மனைவி இந்த நாட்டை விட்டு செல்லலாம், இங்கு எதற்கும் பாதுகாப்பு இல்லை என கூறியதாக அவர் தெரிவித்தார்.இந்த கருத்தால் நாட்டில் உள்ள பல தலைவர்கள் கொதித்து எழுந்துள்ளனர். இதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் அமீர் கானுக்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com